பவர் பத்திரம் என்றால் என்ன ( பவர் பத்திரம் காலம் ) - பவர் பத்திரம் என்பது தன்னால் அந்த சொத்தை பராமரிக்க முடியாமலும் வியாபாரத்தில் பிஸியாகவும் மற்றும் வெளிநாட்டில் இருப்பதாலும் ஒரு ஏஜென்ட்யை நியமிப்பார்கள். அந்த ஏஜென்ட் உங்கள் வீட்டாளர்களாகவும் அல்லது மூன்றாவது நபர்களாகவும் இருக்கலாம். அது பவர் எழுதி கொடுக்கும் நபரை பொறுத்து. பவர் பத்திரம் இரண்டு வகைப்படும்
1. ஜெனரல் பவர்
2. ஸ்பெஷல் பவர்
1. ஜெனரல் பவர் பத்திரம்
ஜெனரல் பவர் என்பது அவர் சொத்தை எந்த வகையிலும் அவர் அனுபவிக்கலாம். அதாவது அவர் விற்பனை செய்யலாம், சொத்தை பராமரிக்கலாம்.
2. ஸ்பெஷல் பவர் பத்திரம்
ஸ்பெஷல் பவர் என்பது அவர் குறிப்பிட்ட எதாவது ஒன்றை அந்த ஏஜெண்ட்க்கு பவர் போடுவார். பவர் எழுதி கொடுப்பவர் முதன்மையாளர் என்றும் பவர் பெறுபவர் முகவர் என்றும் கூறுவர். வாசகர்களின் கேள்விகள் பவர் பத்திரத்தை பற்றி பின்வருமாறு இணைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: https tnreginet gov in portal
A. பவர் எழுதி கொடுப்பவர் வெளிநாட்டில் இருந்தால்
வெளிநாட்டில் இருந்தால் என்ன அங்கு அவர் வெளிநாட்டு தூதர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். அல்லது அங்கும் ஒரு பப்ளிக் lawyer தொடர்பு கொண்டு பவர் பத்திரம் எழுதி கொரியர் செய்யலாம். ஒருவேளை அப்படி முடியாத பட்சத்தில் அவரே வந்து பத்திரப்பதிவு செய்து செல்லலாம்.
இதையும் தெரிஞ்சிக்கோங்க: Slr ஆவணம் என்றால் என்ன
B. பவர் பத்திரம் கட்டணம்
அவர்கள் வீட்டு நபர்கள் இருந்தால் 1000 ரூபாயும் மற்றும் வேறு ஒரு நபர் இருந்தால் 10000 ரூபாயும் வசூலிக்கப்படும். மேலும் அதற்கான முத்திரை தீர்வை மற்றும் கட்டணமும் செலுத்த நேரிடும். மேலே சொன்ன பணம் மாறுபடும்.
இதையும் படிக்க: கூட்டு பட்டா பிரச்சனை
C. முகவர் எப்படி அந்த சொத்தை விற்பது
முதன்மையாளர் பவர் எழுதி கொடுத்த ஒரு மாதத்திற்குள் விற்கலாம். அவர் எழுதி கொடுத்த பவர் பொறுத்ததே. அந்த ஒரு மாதத்திற்குள் அவருடைய permission இல்லாமல் அவர் விற்கலாம். மேலும் அவர் இன்னொரு நபருக்கு கிரையம் செய்து அதனை விற்று விடலாம். மேலும் ஒரு மாதத்திற்கு மேலே சென்றால் அவர் வக்கீல் அல்லது மருத்துவரை அணுகி அவர்க்கு உயிரோடு தான் இருக்கிறார் என்கிற சான்றிதழை வாங்குதல் அவசியம்.