பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா விண்ணப்பம் - பிரதம மந்திரின் வீடு வழங்கும் திட்டத்தினை தான் பிரதான் மந்திரி திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் நாம் வீடு மற்றும் அதற்குண்டான மானியம் அல்லது லோன் இவைகளை எளிதில் பெற முடியும். இத்திட்டம் முடிவதற்கு மார்ச் 2022 கடைசி நாளாக கருதப்படுகிறது. அதற்குள் ஏழை மக்களும் வீடு கட்டாத மக்களும் மற்றும் நிலம் மட்டுமே வைத்திருக்கும் மக்களுக்கும் உபயோகபடுத்தலாம்.
இந்த பிரதான் மந்திரி திட்டம் 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு மார்ச் 22 வரையில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித்தருவது நோக்கமாக கொண்டு இருக்கிறது. இதற்கு முன்னர் இந்திரா அவாஸ் திட்டத்தின் கீழ் தான் அனைவரும் வீடு வாங்கினார்கள். அது பின்னாளில் பிரதான் திட்டம் மூலம் பணமும் உயர்த்தப்பட்டு இன்று வரை செயல்படுத்த படுகிறது. இந்த திட்டம் 40 சதவீதம் மாநில அரசும் மீதம் 60 சதவீதம் மத்திய அரசும் செலயல்படுத்துகிறது. இணையத்தளம் Pmay கொண்டு விண்ணப்பிக்க முடியும்.
பணமாக ரூபாய் இரண்டரை லட்சத்திலுருந்து இரண்டு லட்சத்து அறுபத்தி ஏழாயிரம் வழங்குகிறாரகள். லோன் அமௌன்ட் ஆக ரூபாய் 12 லட்சம் வரையும் சலுகைகளை கொடுப்பார்கள். இந்த திட்டம் நான்கு வகையில் scheme ஆக பிரிக்கப்படுகிறது.
1. பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் (வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் ) - ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மேல் இருக்க கூடாது.
2. பின் தங்கியவர்கள் LIG - ஆறு லட்சத்திற்குள் வருமானம் இருக்க வேண்டும்
3. MIG 1 - 12 லட்சத்திற்கு மேலே இருக்க கூடாது
4. MIG 2 - 18 லட்சத்திற்கு உள்ளே இருக்க வேண்டும்
இந்த நான்கு வகை பிரிவுகளை வைத்து தான் லோன் அமௌன்ட் மற்றும் மானியம் மத்திய அரசு வழங்குவார்கள்.
விதிமுறைகள்
1. கண்டிப்பாக வேறொரு நிலம் அல்லது வீடு இருக்க கூடாது
2. ஆண்டு வருமானம் உங்கள் பிரிவுக்கு ஏற்றாற்போல் இல்லாமல் அதிகமாக இருக்க கூடாது
3. அரசு வேலையில் உள்ள நபர்கள் கண்டிப்பாக அப்ளை செய்ய முடியாது
4. ஆதார் கார்டு கண்டிப்பாக இருக்க வேண்டும்
5. ப்ரொபேர்ட்டி டாக்குமெண்ட்ஸ் இருத்தல் அவசியம்
6. பசுமை வீடு திட்டம் மற்றும் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஏற்கனவே வீடுகள் வாங்கி இருந்தால் இந்த திட்டம் அவர்களுக்கு எலிஜிபிள் இல்லை.