பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி விண்ணப்பம் - இந்த கிசான் திட்டம் விவசாயிகள் மற்றும் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைய மத்திய அரசு பல திட்டங்களை அவர்களுக்கு வழங்கி வருகிறது. அதில் முக்கியமான ஒன்று தான் பின் கிசான் யோஜனா திட்டம் ஆகும்.
அப்டேட் ஏப்ரல் 05, 2022
இந்த ஏப்ரல் மாதத்திற்குள் கிசான் திட்டத்தின் கீழ் வாங்கும் உதவித்தொகை வர உள்ளது. இது மத்திய அரசு கொடுக்கும் பதினோராவது தவணை ஆகும். ஆனால் இந்த முறை மத்திய அரசாங்கம் இந்த 11 வது தவணை பணம் தர சில பல கண்டிஷன்கள் எல்லாம் பின்பற்றினால் தான் இந்த பணமும் வரும் என்று கூறி இருக்கிறார்கள். அது என்னவென்றால் ஆதார் அட்டையை இந்த KCC உடன் இணைக்க மே 31, 2022 கடைசி தேதியாக அறிவித்திருக்கிறது. இந்த முறை நேரடியாக CSC மையத்தில் சென்று அப்டேட் செய்ய வேண்டும். அதனை மீறும் பட்சத்தில் ஆதார் இணைக்க வில்லை என்றால் 11 வது தவணை பணம் கண்டிப்பாக வராது எனவும் குறிப்பிட்டிருந்தார்கள்.
இதனால் சிறிய மற்றும் பெரிய விவசாயிகள் இருவர்களும் நன்மை பயக்கும் வகையில் மத்திய அரசாங்கம் வருடத்திற்கு மூன்று தவணைகள் வீதம் ரூபாய் 6000 வழங்குகிறது. டிசம்பர் 2021 வரையில் மத்திய அரசு கிட்ட தட்ட ஒன்பது தவணைகளின் பணமெல்லாம் ,விவசாயிகளுக்கு வழங்கி இருக்கிறது. இப்போது ஜனவரி 01, 2022 தேதியில் கிசான் திட்டத்தின் பத்தாவது தவணைகளை வழங்கி உள்ளது.
முக்கியமாக ஏராளமான கிசான் சம்மன் நிதி பெறுபவர்கள் லிஸ்டை நீக்கம் செய்தது. ஏனென்றால் அதில் போலியான ஆவணங்கள் உள்ளீடு செய்து அதன் மூலம் பணம் பெறுபவர்கள் லிஸ்டை நீக்கம் செய்து உள்ளார்கள். உங்களுக்கு எத்தனை தவணை பணம் வந்து இருக்கிறது அல்லது எத்தனை தவணைகள் பணம் வரவில்லை என்று அறிந்து கொள்வதற்கு நாம் Pmkisan வெப்சைட் ற்கு செல்ல வேண்டும்.
Pm கிசான் பட்டியல்
அதில் உங்கள் நகராட்சி, கிராமம் மற்றும் ஊர் வாரியாக அனைத்து லிஸ்ட்களும் இருக்கும். உங்களுடைய விவரங்கள் மட்டுமல்லால் ஊரில் உள்ள கிசான் விவசாயிகள் விவரங்களும் அறிந்து கொள்ளலாம். இதன் விண்ணப்பங்கள் அனைத்தும் official இணையத்தளத்தில் இருக்கிறது.