புறம்போக்கு நிலம் வகைகள் - புறம்போக்கு நிலம் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டில் வரக்கூடிய நிலத்தினை சேர்ந்தது ஆகும். இதன் பெயர் முன்னர் எல்லாம் தீர்வை ஏற்படுத்தாத அரசு நிலம் என்று கூறி வந்தனர். ஆனால் நாளடைவில் அது புறம்போக்கு நிலம் பெயர் காரணம் ஆக ஆனது. புறம்போக்கு நிலம் என்றால் யாரும் ஆக்கிரமிப்பு அல்லது வாழக்கூடாதா என்று கேட்டால் அது முற்றிலும் தவறு. ஏனென்றால் புறம்போக்கின் நிலங்களின் வகைகள் ஏராளமாக இருக்கிற காரணத்தினால் ஒரு சிலர் வாழ முடியும் ஒரு சிலர் வாழ முடியாது. இதன் வகைகள் என்று பார்த்தால் ஏராளமாக இருக்கிறது. அதில் மிகவும் முக்கியமானவை மட்டுமே இதில் காணலாம்.
புறம்போக்கு வகைகள்
1. நத்தம் - மக்கள் வாழக்கூடிய இடம்
2. நீர்நிலை - நீர்நிலைகள் என எடுத்துக்கொண்டால் ஓடை, ஏரி, குளம், குட்டை, ஆறு போன்ற பகுதிகளில் இருக்கக்கூடிய இடங்கள் ஆகும். இதிலும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இதில் உள்ள இடங்கள் எல்லாம் தற்போது அரசாங்கம் ஆக்கிரமித்து வருவதனால் மக்கள் அங்கு வாழக்கூடிய சூழல் கிடையாது.
பட்டா சிட்டா
3. மேய்ச்சல் அல்லது மேய்க்கால் - ஆடு, மாடு போன்ற கால்நடைகள் மேயக்கூடிய இடங்கள்
4. அனாதீனம் - யாரும் கண்டுகொள்ளாத அல்லது எப்போதும் உபயோகப்படுத்தாமல் அனாதையாக இருக்கும் பகுதிகள்
5. தரிசு - எந்த வித வீடுகள் கட்டிக்கொள்ளாத இடங்கள். ஆனாலும் மக்கள் ஒரு சிலர் வாழ்ந்து வருகின்றனர். இது அரசாங்கத்துக்கு எதிரானது ஆகும். இதில் விவசாயம் மட்டுமே செய்ய வேண்டும் என சட்டம் சொல்கிறது.
6. மந்தைவெளி
7. கோவில் நிலம்
8. தோப்பு நிலங்கள்
9. பாட்டை
10. களம்
குறிப்பு
வரிசை எண் இரண்டில் குறிப்பிட்டுள்ள நீர்நிலை புறம்போக்கு நிலங்களின் வகைகள் என்றும் கூறலாம் அல்லது அதனை தனித்தனியாக கூட புறம்போக்கு நிலம் என்றும் வகைப்படுத்தலாம்.
பத்திர பதிவு செலவு 2023
இப்போது உள்ள சூழ்நிலையில் அரசாங்கம் நத்தம் மற்றும் தரிசு நிலங்களுக்கு மட்டுமே அனுமதி தருகிறது. மற்ற நிலங்களில் வீடுகளை அல்லது தனிப்பட்ட விஷயங்கள் செய்வதற்கு அனுமதி தருவதில்லை.