புதிய மாநகராட்சி பட்டியல் 2024

புதிய மாநகராட்சி பட்டியல் 2024 ( new corporation in tamilnadu 2024 ) - தமிழகத்தில் ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி என பிரிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தனித்தனியாக செயல்படுகிறது. இதனால் மக்களுக்கும் எளிதாக அவர்கள் குறைகள், பிரச்சனைகள், தேவைகள் மற்றும் இதர விஷயங்களை அவர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் உருவாக்கி கொள்ளலாம். 2019 ஆம் ஆண்டு வரையில் 15 மாநகராட்சிகளே இருந்த நிலையில் மேலும் ஆறு மாநகராட்சியை உருவாக்கினார்கள். அவைகள் அனைத்தும் 2021 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. கடைசியாக ஆவடியை ( திருவள்ளூர் மாவட்டம் ) 2019 ஆம் ஆண்டு ஜூன் 19 இல் உருவாக்கினார்கள்.


2021 ஆம் ஆண்டு புதிதாக அறிவிக்கப்பட்ட மாநகராட்சிகளின் பட்டியல்கள் லிஸ்ட்

1. தாம்பரம்

2. காஞ்சிபுரம்

3. கடலூர்

4. கரூர்

5. கும்பகோணம்

6. சிவகாசி.

2024 இல் அறிவிக்கப்பட்டுள்ள புதிய மாநகராட்சிகளின் பட்டியல்கள்

1. புதுக்கோட்டை

2. நாமக்கல்

3. திருவண்ணாமலை

4. காரைக்குடி.

இதையும் படிக்க: Veetu vari online payment

இணைத்த பகுதிகள்

1. தாம்பரம் ( செங்கல்பட்டு மாவட்டம் ) - இதனை ஒட்டியுள்ள பம்மல், பல்லாவரம், அனகாபுத்தூர், செம்பாக்கம்,பெருங்களத்தூர், சிட்லம்பாக்கம் பகுதிகளை இணைத்து தாம்பரத்தினை உருவாக்கினர்.

2. காஞ்சிபுரம் - வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு ( காஞ்சிபுரம் ).

3. கரூர் - கிழக்கு, இனாம், மேற்கு, தாந்தோணி.

4. கும்பகோணம் ( தஞ்சாவூர் மாவட்டம் ) - வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மேற்கு.

5. கடலூர் - வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் நெல்லிக்குப்பம்.

6. சிவகாசி ( விருதுநகர் மாவட்டம் ) - மத்தி, கிழக்கு, மேற்கு மற்றும் திருத்தங்கல்.

குறிப்பு

இதில் வடக்கு, தெற்கு,மேற்கு மற்றும் கிழக்கு என குறிக்கப்பட்டிருக்கும் திசைகள் அனைத்தும் அந்தந்த ஊர்களில் உள்ள பகுதிகள் ஆகும்.

கிராமத்தில் வீடு கட்ட விதிமுறைகள்