புதிய மின் இணைப்பு பெற கட்டணம் எவ்வளவு 2024 - வீடுகள் கட்டி முடிப்பதற்கு முன்னரே தற்காலிக மின் இணைப்பு வாங்குவது வழக்கமாகும். அதனை வீட்டு மின் இணைப்பிற்கு மாற்றுவது மிகவும் சுலபமே. ஆனால் வீடு கட்டுவதற்கு முன்னர் எந்த வித மின் இணைப்பும் உபயோகப்படுத்தாமல் இருக்கும் வீட்டிற்கு புதிதாக தான் அப்ளை செய்ய வேண்டும்.
தற்போது புதிய இணைப்பு பெற 7 நாட்களே போதும் என்கிறது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம். முன்னர் 30 நாட்களுக்கும் மேலே இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆன்லைனில் அல்லது நேரில் சென்றும் விண்ணப்பிக்கலாம். தகுந்த ஆவணங்களை கொண்டு விண்ணப்பித்தால் ஏழு நாட்களுக்குள் கிடைத்துவிடும்.
இதையும் படிக்க: மின் இணைப்பு இடமாற்றம் விண்ணப்பம்
நீங்கள் இருக்கின்ற பகுதிக்கு கம்பம் இல்லை என்றால் அதற்குண்டான கட்டணத்தையும் கொடுக்க வேண்டும். மேலும் கம்பம் வைத்து மின் இணைப்பு கொடுக்க 60 முதல் 90 நாட்கள் ஆகும். ஏற்கனவே மின் கட்டணம் உயர்ந்துள்ள நிலையில் தற்போது மின் இணைப்பு கட்டணமும் ஏறியுள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு.
இதையும் படிக்க: Tneb மீட்டர் போர்டு மாற்றும் கட்டணங்கள்
கட்டணங்கள்
1. சர்வீஸ் - 1000
2. மீட்டர் டெபாசிட் - 750
3. மேம்பாட்டு கட்டணம் - 2100
4. பதிவுக்கட்டணம் - 200
5. வளர்ச்சி மற்றும் இதர - 1000
மொத்தமாக 5, 050 ரூபாய் வீதம் கட்டணங்கள் வசூல் செய்யப்படுகின்றது. இதுவே 3 பேஸ் என்றால் 6, 600 ரூபாயும் கேபிள் வழியாக மின் இணைப்பு கொண்டு வர 9, 250 ரூபாயும் ஆகிறது.
இதையும் பார்க்க: மின் மீட்டர் இடமாற்றம் கடிதம்