புதிய மின் இணைப்பு விண்ணப்பம் Pdf

புதிய மின் இணைப்பு விண்ணப்பம் Pdf ( வீட்டிற்கு புதிய மின் இணைப்பு பெறுவது எப்படி ) - புதிய மின் இணைப்பு பெற தமிழ்நாடு மின்சார வாரியம் ஆன்லைனிலே விண்ணப்பிக்க வழி வகுத்துள்ளது.  நீங்கள் வாங்கும் மின் இணைப்பு வீட்டின் இணைப்பு, Commercial இணைப்பு, தற்காலிக மின் இணைப்பு மற்றும் தோட்டக்கலை மின் இணைப்பு ஆகியவற்றையும் அப்ளை செய்யலாம். அதனை நாம் மிகவும் எளிய முறையில் எப்படி விண்ணப்பிப்பது என்று பார்ப்போம். 

புதிய மின் இணைப்பு விண்ணப்பம் Pdf


தேவையான ஆவணங்கள் 

1. வீட்டு ரசீது 

2. VAO சான்று 

3. பட்டா சிட்டா அடங்கல் 

4. பத்திரம் 

இந்த நான்கும் கட்டாயமில்லை. இதில் ஒன்று மட்டுமே ஆவணங்களாக கேட்பார்கள். அது நீங்கள் வாங்கும் மின் இணைப்பு பொறுத்ததே. 

எப்படி நாம் ஆன்லைனில் விண்ணப்பிப்பது 

1. Tnebltd இணையதளம் செல்லுங்கள் ( நேரடியாகவே அந்த இணையதளத்திற்கு செல்லும்). சென்ற உடன் உங்கள் தொலைபேசி எண்னை அதில் என்டர் செய்யவும். உங்கள் எண்ணிற்கு OTP வரும். அதனை என்டர் செய்தால் தான் நாம் இதர விவரங்களை பூர்த்தி செய்ய முடியும்.

2. பொது விவரங்களை பூர்த்தி செய்யுங்கள் மாவட்டம், வட்டம், பிரிவு, மின் கோருபவர் வகை, உரிமையாளர் விபரம்.

3. விண்ணப்ப முகவரி 

4. இந்த மூன்று விவரங்களை பூர்த்தி செய்த உடன் யார் அப்ளை செய்கிறார்களோ அவருடைய பெயர், தந்தை/தாய்/கணவன் மற்றும் உங்கள் உபயோகித்து கொண்டு இருக்கும் மின் அஞ்சல் இவை எல்லாம் அப்டேட் செய்ய வேண்டும்.

5. மூன்றாவது ஸ்டேப் ஆக சரியான முகவரியை கொடுக்கவும், உதாரணமாக கதவு எண், தெரு பெயர், நகரம், கிராமம், தாலுகா, அஞ்சல் குறியீடு.

6. இறுதி ஸ்டேப் ஆக Tariff அண்ட் Load டீடெயில்ஸ் விவரங்களையும் அதில் அப்டேட் செய்ய வேண்டும்.

இந்த விவரங்களை எல்லாம் முடித்த பிறகு டாக்குமெண்ட்ஸ் அப்லோட் செய்யுங்கள். செய்த பின்னர் கட்டணமாக ரூபாய் 2818 யை செலுத்த வேண்டும். மொத்தமாக முடிந்த பின்னர் உங்கள் அப்ப்ளிகேஷன் ஸ்டேட்டஸ் எந்த நிலையில் உள்ளது என்று ஆன்லைனில் பார்க்கலாம். 

புறம்போக்கு இடத்திற்கு மின் இணைப்பு Pdf