புதிய பென்ஷன் திட்டம் 2024 ( New )

புதிய பென்ஷன் திட்டம் 2024 - பென்ஷன் திட்டம் என்பது அரசு ஊழியர்கள் மற்றும் அதனை சார்ந்த ஊழியர்களின் தனது அறுபது வயதிற்குப்பிறகு கொடுக்கக்கூடிய அல்லது வரக்கூடிய தொகை தான் இந்த பென்ஷன் திட்டம். மொத்தமாக இரண்டு பென்ஷன் திட்டம் அடிப்படையில் தான் தமிழகம் செயல்பட்டு வருகிறது. ஒன்று பழைய பென்ஷன் மற்றும் புதிய பென்ஷன். இரண்டிற்குமே ஏகப்பட்ட வித்தியாசங்கள் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் மக்கள் குழப்பம் அடைகின்றனர். இந்த திட்டங்கள் மத்திய அரசு மற்றும் மாநில அரசு சேர்ந்து எடுக்கும் முடிவுகள் ஆகும்.

புதிய பென்ஷன் திட்டம்


பழைய பென்ஷன் திட்டம் 2003

இந்த திட்டம் 2003 க்கு முன்னர் இதைத்தான் செயல்படுத்தி வந்தனர். இதனால் அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தான் என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் முழு ஓய்வூதிய பணம், போனஸ், பணிக்கொடை மற்றும் இதர வசதிகள் எல்லாம் இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும்.

Epf ஓய்வூதியம் சமீபத்திய செய்தி

புதிய பென்ஷன் திட்டம் 2004 - 2024

இந்த திட்டம் கீழ் பயன்பெறுவோர்கள் இறுதியாக ஓய்வூதிய பணத்தை மொத்தமாக தான் பெறுவார்கள். மாத மாதம் பணம் வராது.

பென்ஷன் கணக்கிடும் முறை

அரசாங்க ஊழியர்கள் சம்பாதிக்கும் கடைசி மாத சம்பளத்தின் அடிப்படையில் தான் அவர்களுக்கு தொகை வரும். உதாரணமாக ஒருவர் 20, 000 ரூபாய் வாங்குகிறார் என்றால் அவருக்கு ஓய்வூதியம் பணம் 10, 000 ரூபாய் வரும். இந்த பணம் அனைவருக்குமே ஒரே மாதிரி வருவதில்லை. ஏனென்றால் அரசாங்கம் தகுதி பெறும் பணிக்காலம் மற்றும் தகுதி பெறாத பணிக்காலம் என்று இரண்டு வகைகளாக பிரித்து அதற்கு ஏற்றாற்போல் பணம் வழங்குவார்கள்.

பி எப் பணம் பெறுவது எப்படி

NPS திட்டம்

இப்போது நடைமுறையில் பழைய திட்டத்தை கொண்டுவந்தால் 24, 000 கோடி செலவாகும் என்றும் தனி நபருக்கு ரூபாய் 2, 00, 000 வரையும் செலவாகும் என்றும் புதிய திட்டம் கீழ் ஏற்கனவே ஓய்வூதியம் வாங்கும் பணம் 3, 250 கோடி என்றும் தனி நபருக்கு ரூபாய் 50, 000 மட்டுமே செலவாகும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்திருக்கிறார். வரும் நாட்களில் பழைய திட்டம் கொண்டு வரப்படும் என்று 13, 00, 000 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர் நோக்கி இருக்கின்றனர்.