புதிய தொழில் தொடங்க நல்ல நாள் 2025 ( ஏற்ற மாதம், ஏற்ற நட்சத்திரம் ) - தொழில் என்பது ஒருவர் தனது வருமானத்தை கூட்டுவதற்கு ஆரம்பிக்கப்படும் ஒரு செயலாகும். இதனால் அவர் குடும்பம் மற்றும் அவர்களை சார்ந்த குடும்பங்களும் அந்த தொழிலை சார்ந்து தான் இருப்பர். அப்படி இருக்கும் தொழிலை பெரிதளவு ஆக்க வேண்டுமென்று தினமும் போராடி கொண்டே தான் நாம் இருக்கிறோம் என்று சொன்னால் அது மிகையாகாது. புதிதாக தொழில் ஆரம்பித்தாலும் அல்லது ஏற்கனவே ஆரம்பித்த தொழிலை புதுப்பிக்க வேண்டுமென்றாலும் அல்லது துவண்டு போன தொழிலை மறுபடியும் ஆரம்பிக்கவும் ஒரே வழியை பின்பற்றினால் போதுமானது. அது என்னவென்றால் நாள், நட்சத்திரம், திதி மற்றும் மாதம் ஆகும்.
மாதம்
1. சித்திரை
2. வைகாசி
3. ஆனி
4. ஆவணி
5. ஐப்பசி
6. தை
7. பங்குனி
திதி
1. திருதியை
2. சப்தமி
3. துவாதசி
4. தசமி
5. ஏகாதசி
ஏற்ற நட்சத்திரம்
1. அசுவினி
2. புனர்பூசம்
3. சித்திரை
4. உத்திரம்
5. அஸ்தம்
6. திருவோணம்
குறிப்பு
தொழில் புதிதாக தொடங்கும்போது உங்கள் நட்சத்திரம் இருக்க கூடாது. அதாவது உங்கள் ஜென்ம நட்சத்திரம் உத்திரம் என்றால் அன்றைய தினம் செய்யக்கூடாது.
புது கணக்கு ஆரம்பிக்க 2025 நல்ல நாள்
லக்கினம்
1. ரிஷபம்
2. மிதுனம்
3. கடகம்
4. கன்னி
5. துலாம்
6. மகரம்
7. மீனம்
குறிப்பு
லக்கினத்தை பொறுத்தவரை சுப முகூர்த்தங்களாக இருக்க வேண்டும். அதாவது நான்கு, எட்டு மற்றும் பன்னிரெண்டு இடங்கள் சுத்தமாக இருத்தல் நல்லது.
நாளைய ராசிபலன்
நாள்
1. புதன்
2. வியாழன்
3. வெள்ளி
4. ஞாயிறு
5. திங்கள்
குறிப்பு
தொழில் தொடங்கும் நபர் அன்றைய தேதியில் பிறந்திருந்தால் ஆரம்பிக்க கூடாது. மேலும் கரி நாள், சந்திராஷ்டமம் இருத்தல் கூடாது.
வாசகர்களின் சில சந்தேகங்கள் கேள்வி மற்றும் பதில் வடிவமாக கீழே தரப்பட்டுள்ளது. அதனை பார்த்து உங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்.
எந்தெந்த மாதங்களில் தொழில் தொடங்கலாமா மற்றும் தொடங்கக்கூடாது
பங்குனி மாதத்தில், ஆனி மாதத்தில் தொழில்களை தொடங்கலாம். புரட்டாசி, ஆடி மாதத்தில் மற்றும் அமாவாசையில் புதிய தொழில்கள் தொடங்கக்கூடாது.
சித்திரையில் தொழில் தொடங்கலாமா
நாம் மேற்குறிப்பிட்டுள்ளவாறு சித்திரை மாதங்களில் எந்த வித சுப விசேஷங்கள், தொழில்கள் தாராளமாக துவங்கலாம்.
இன்று சந்திராஷ்டமம் எந்த நட்சத்திரம்