புது கணக்கு ஆரம்பிக்க 2024 நல்ல நேரம் மற்றும் நாள் - புதுக்கணக்கு 2024 ஆண்டில் தொடங்க ஏப்ரல் மாதம் சிறப்பானதாக இருக்கும். ஒவ்வொரு நிதியாண்டு என்பது ஏப்ரல் 01 இல் தொடங்கி அடுத்த வருடம் மார்ச் 31 வரையும் இருக்கும். இது பொதுவாகவே வங்கி மூலமாக தான் மக்களுக்கு தெரியும். ஆனால் தற்போது அனைத்து நிறுவனங்களும் செயல்படுத்த துவங்கி உள்ளது. ஆம் உதாரணமாக போஸ்ட் ஆபிஸில் சேமித்து வைக்கும் பணங்கள் அனைத்தும் ஏப்ரல் 01 முதல் மார்ச் 31 வரையும் கணக்கிடப்படுகிறது. இதுபோல் ஒவ்வொரு நிறுவனமும் செயல்படுத்த துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
புது கணக்கு என்பது பொதுவாக வியாபார நோக்கில் அனைவரும் செயல்படுத்த தொடங்குவர். ஏனெனில் பழைய கணக்கினை மார்ச் 31 க்குள் முடித்துவிட்டு புது புத்தக நோட்டுகள் ஏப்ரல் 01 ம் தேதி வாங்கி தொடங்குவர். அதில் ஏற்கனவே பேலன்ஸ், இருப்புத்தொகை, வரவு செலவுகள் எல்லாம் முடித்து வைத்து விட்டு இந்த புது கணக்கை தொடங்கலாம். மேலும் வங்கி கணக்கு தொடங்குவதற்கும் ஏதுவான நாளாக ஒவ்வொரு ஆண்டின் ஏப்ரல் 01 இருக்கும். ஆனால் ஏப்ரல் 01 அன்று உங்கள் நட்சத்திரம், ஓரை, கிரகம் பார்த்து பின்னர் புதிய கணக்கை ஆரம்பிக்கலாம்.
வாஸ்து அளவுகள்