ராகு கேது பெயர்ச்சி 2023 எப்போது

ராகு கேது பெயர்ச்சி 2023 எப்போது ( rahu ketu peyarchi 2023 date in tamil ) - கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பலனை தரும். அந்த வகையில் ராகு மற்றும் கேது இவைகள் அசுப கிரகங்கள் ஆகும். இது எந்த வீட்டில் சஞ்சாரம் அடைதல் மற்றும் மற்ற கிரகங்களில் நிலையை பொறுத்தே ஒருவருக்கு நன்மை மற்றும் தீமை அமையும். இரண்டும் நேரடியாக தடங்கல்கள் கொடுக்காமல் மறைமுகமாக உங்களுக்கு தடங்கல்கள் கொடுக்கும்.

ராகு கேது பெயர்ச்சி 2023 எப்போது


இந்த கிரகங்கள் ஒன்றரை வருடத்திற்கு ஒருமுறை வீதம் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறது. ஏப்ரல் 12, 2022 இல் மேஷம் மற்றும் துலாம் ராசியில் ராகு கேது சஞ்சாரம் அடைந்தது. இது பின்னோக்கி நகரும் கிரகம் என்பதால் ஒரு ராசிக்கு முன்னர் வருகின்ற வருகின்ற ராசியில் இரண்டுமே சஞ்சாரம் அடையும். அந்த வகையில் இந்த வருடம் அக்டோபர் மாதம் 30 தேதியன்று பெயர்ச்சி அடைகின்றார்கள். கிட்டத்தட்ட 547 நாள் கழித்து ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்கள்.

இதையும் படிக்கலாமே: சனி பிரதோஷம் 2023 தேதிகள்

ராகு கேது பெயர்ச்சி 2023 to 2024 எப்போது

திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 நாளில் ராகுவானது குருவின் வீடான மீனத்திலும், கேதுவானது புதனுக்கு அதிபதியான கன்னிகா ராசியிலும் அமரப்போகிறார்கள்.

இதையும் தெரிஞ்சிக்கலாமே: திருப்பதி நடைபாதை திறக்கும் நேரம் 2023