ரேஷன் கார்டு 1000 ரூபாய் தமிழ்நாடு தகுதி

ரேஷன் கார்டு 1000 ரூபாய் தமிழ்நாடு தகுதி form - தமிழ்நாடு அரசாங்கமானது செப்டம்பர் 2023 லிருந்து ஒவ்வொரு குடும்ப அட்டை தாரர்களுக்கும் உரிமைத்தொகையாக ரூபாய் 1000 வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமான அறிக்கை விட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் இது பொருந்தாது. சில பல நிபந்தனைகளோடும் மற்றும் சரியான விதிமுறைகளின் கீழ் கட்டுப்பட்டு இருந்தால் மட்டுமே அவர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசாங்கம் அறிவித்துள்ளது.

ரேஷன் கார்டு 1000 ரூபாய் தமிழ்நாடு தகுதி


செப்டம்பர் 15, 2023 லிருந்து சுமார் 1 கோடி ரேஷன் அட்டைகளுக்கு அவர்களின் வங்கி கணக்கில் ரூபாய் ஆயிரம் வரவு வைக்கப்படும். இந்த தேதியானது ஊர்களுக்கு ஊர் மாறுபடும்.

இதையும் பார்க்க: எந்த ரேஷன் கார்டுக்கு மாதம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்

ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் நேரடியாக பணம் சேரும். ஆதார் அட்டையுடன் எந்த வங்கி இணைப்பட்டுள்ளது என பயனாளர்கள் முதலில் தெரிந்து கொள்ளுங்கள். வீடு வீடாக டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் கொடுக்கப்படுகின்றன. அந்த விண்ணப்பத்தில் அனைத்து நிபந்தனைகளும் கொடுக்கப்பட்டு இருக்கும். அதில் மிகவும் முக்கியமான நிபந்தனைகள் பின்வருமாறு.

1. இரண்டறை லட்சம் கீழ் ஆண்டு வருமானம் இருக்க வேண்டும்.

2. எந்த உதவிதொகையும் இதுவரையில் வாங்காமல் இருக்க வேண்டும்.

3. ஒரு ஆண்டிற்கு வீட்டு மின்சார யூனிட் 3600 யை தாண்டி இருக்கக்கூடாது.

இதுபோல நிறைய நிபந்தனைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு எல்லாம் கட்டுப்பட்டு சரியாக இருக்குமாயின் அப்ளை செய்யலாம். இந்த விண்ணப்பங்கள் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் கண்காணிப்பில் இருக்கும்.

ஒருவேளை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் நிராகரிக்கப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் வருவாய் கோட்டாட்சியரிடம் உரிய ஆவணங்களோடு சென்று மனு கொடுக்கலாம்.

இதையும் பார்க்க: மகளிர் உரிமைத் தொகை திட்டம் apply online