ரேஷன் கார்டு பதிவிறக்கம்

ரேஷன் கார்டு பதிவிறக்கம் - குடும்ப அட்டை ஒன்று இன்றி அமையாத ஒரு விஷயமாக உள்ளது. ஏனெனில் பொருளாதார ரீதியில் உள்ள மக்களுக்கும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கும் மற்றும் தனி ஒரு அடையாளமாக தனிப்பட்ட நபருக்கும் ஒரு பாலமாக அமைகிறது. கூடிய விரைவில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் மக்கள் எங்கும் சென்றும் அவர்கள் அத்தியாவிசய பொருட்களை வாங்கி கொள்ளலாம்.


ரேஷன் கார்டு பதிவிறக்கம்


இந்த ரேஷன் கார்டினை தொலைத்து விட்டாலோ அல்லது இல்லை என்றாலோ நாம் நகல் பயன்படுத்தி வாங்கி கொள்ளலாம். அதனை எப்படி எடுப்பது என்று இப்பதிவில் காணலாம்.
முதலில் Tnpds வெப்சைட் சென்று பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணை உள்ளீட்டு Otp யை என்டர் செய்து உள்ளே வலது பக்கத்தில் பதிவிறக்கம் என்கிற option இருக்கும். அதனை டவுன்லோட் அல்லது பிரிண்ட் எடுத்து கொண்டு அருகில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பொருட்களை வாங்கி கொள்ளலாம்.
ஆனால் இந்த நகல் எல்லாவற்றிற்கும் பயன்படாது. ஏனெனில் பயோ மெட்ரிக் முறையை  ஒரிஜினல் அட்டையை வைத்து தான் செய்ய முடியும். அதனால் முடிந்த அளவில் அட்டையை தாலுகா வட்ட வழங்கல் அதிகாரியிடம் வாங்கி கொள்ளுங்கள்.