ரேஷன் கார்டு பெயர் சேர்த்தல்

ரேஷன் கார்டு பெயர் சேர்த்தல் ( Ration card peyar serthal ) - ரேஷன் கார்டில் பெயரை சேர்த்தல் என்பது இப்போது மிகவும் சுலபமாகிவிட்டது என்றே சொல்லலாம். ரேஷன் அட்டை என்பது மானிய விலையில் பொருட்கள் கிடைக்கும் இடமாகும். இதனை அரசாங்கம் நடத்தி வருகின்றது.

ரேஷன் கார்டு பெயர் சேர்த்தல்


ரேஷன் கார்டு முன்னரெல்லாம் புக் வடிவத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும். அதனை எளிமைப்படுத்தி ஸ்மார்ட் கார்டு வடிவத்திற்கு கொண்டு வந்தார்கள். மேலும் அதில் கை ரேகை மூலமாக பொருட்கள் வாங்கும் வசதி ஏற்படுத்தி உள்ளார்கள்.

இதையும் படியுங்க: குடும்ப அட்டை உறுப்பினர் சேர்க்கை

ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க என்ன செய்ய வேண்டும்?

1. புதிதாக ரேஷன் அட்டையில் பெயர் சேர்க்கவேண்டுமென்றால் Tnpds வெப்சைட் சென்று மின்னனு அட்டை தொடர்பான சேவைகளில் உறுப்பினர் சேர்க்க என்பதை தேர்வு செய்து உள்ளே செல்லவும். 

2. சென்ற உடன் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணை அதில் உள்ளிடவும். அப்படி உள்ளிட்ட பின்பு உங்கள் தொலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வரும். 

3. இதெல்லாம் முடிந்த பின்னர் யாரை சேர்க்க விரும்புகிறீர்களாளோ அவரின் விவரங்கள் சரியாக பூர்த்தி செய்து ஆதார் அட்டை அல்லது பிறப்பு சான்றிதழை அதில் அப்லோட் செய்ய வேண்டும்.

4. மேற்கண்ட process முடிந்த பின்னர் உங்களுக்கு குறிப்பு எண் ஒன்று வழங்கப்படும். இந்த குறிப்பு எண் எதற்காக என்றால் உங்கள் விண்ணப்பத்தின் நிலை எந்த நிலையில் உள்ளது என எளிமையாக கண்டறியலாம்.

இதையும் தெரிஞ்சிக்கோங்க: ரேஷன் கார்டு இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்