ரேஷன் கார்டு விண்ணப்பத்தின் நிலை

ரேஷன் கார்டு விண்ணப்பத்தின் நிலை ( மின்னணு அட்டை விண்ணப்பத்தின் நிலை ) - ரேஷன் கார்டு பெயரை இரண்டு வழிகளில் நாம் கூறலாம். அதில் ஒன்று ஸ்மார்ட் கார்டு மற்றும் மின்னணு அட்டை. இந்த இரண்டுமே ரேஷன் கார்டு என்று பொருள். இதில் விண்ணப்பம் நிலையை அறிந்து கொள்ள வெறும் ஒரு நிமிடம் மட்டுமே போதும். இந்த விண்ணப்ப நிலைகள் புதிய கார்டு வாங்குவதற்கும் மற்றும் அட்டை புதுப்பிக்க மட்டுமே. மாறாக அட்டை தொடர்பான நிலையை சரிபார்க்க வேண்டும் என்றால் கீழ்கண்ட ஏழு பாயிண்ட்ஸ் இருந்தால் மட்டுமே இந்த வழியாக தான் செல்ல வேண்டும்.

ரேஷன் கார்டு விண்ணப்பத்தின் நிலை


மின்னணு அட்டை விண்ணப்பத்தின் நிலை ( வகைகள் )

1. புதிய ரேஷன் கார்டு அப்ளை செய்திருந்தால்

2. ரேஷன் அட்டையில் முகவரி மாற்றி இருந்தால்

3. பெயர்களை திருத்தி இருந்தால்

4. அட்டை பிறழ்வுகள் நிலையை அறிந்து கொள்ள

5. மறுபரிசீலனை செய்வதற்கு.

6. பெயரை சேர்ப்பதற்கு

7. பெயரை நீக்குவதற்கு

இந்த ஏழு நிலைகளையும் அட்டை தொடர்பான சேவைகளில் மட்டும் தான் அறிந்து கொள்ள முடியும். இந்த இரண்டிற்குமே குறிப்பு எண்கள் கொடுக்கப்படும். ஆனால் மக்கள் குழப்பம் அடைந்து மாற்றி மாற்றி என்டர் செய்வார்கள். உதாரணமாக ஒருவர் மின்னணு அட்டைக்காக காத்திருக்கிறார் என்றால் அவருக்கு ஒரு குறிப்பு எண் அப்ளை செய்த பின்னர் கொடுத்திருப்பார்கள். அவரும் அப்போது செக் செய்ய அட்டை தொடர்பான நிலையில் என்டர் செய்தால் அவருடைய விண்ணப்ப நிலை காட்டாது.


புதிய கார்டு நீங்கள் பொது சேவை மையத்திலோ அல்லது வீட்டில் இருந்தபடியே அப்ளை செய்திருந்தால் Tnpds வெப்சைட் ஓபன் ஆனதும் முதலில் மின்னணு அட்டை சேவைகள் சென்று இரண்டாவது ஆப்ஷன் தேர்வு செய்து எண்ணை என்டர் செய்தால் உங்கள் அப்ப்ளிகேஷன் நிலைமையை எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

ஸ்மார்ட் ரேஷன் கார்டு ஸ்டேட்டஸ்

மின்னணு அட்டை கோப்பு பதிவிறக்கம்