ரேஷன் கார்டில் போன் நம்பர் சேர்ப்பது எப்படி

ரேஷன் கார்டில் போன் நம்பர் சேர்ப்பது எப்படி ( ரேஷன் கார்டு போன் நம்பர் மாற்றம், ரேஷன் கார்டு நம்பர் எது இந்த ஸ்மார்ட் கார்டு ) - ரேஷன் கார்டு எனும் குடும்ப அட்டையில் தொலைபேசி எண்ணை சேர்ப்பதற்கு அல்லது மாற்றுவதற்கு மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால் தற்போது அது போல் இல்லாமல் மிகவும் எளிமையான முறையில் தொலைபேசி எண்ணை மாற்றலாம் அல்லது சேர்க்கலாம்.

ரேஷன் கார்டில் போன் நம்பர் சேர்ப்பது எப்படி


புதியதாக விண்ணப்பிக்கும் மக்களுக்கு இது போல் அவசியமில்லை. ஏனென்றால் அவர்கள் அப்ளை செய்யும்போது அனைத்து விதமான விவரங்களையும் குடும்ப அட்டையில் கொடுத்திருப்பார்கள். அதனால் புதிதாக போன் எண் கொடுக்கும்போது மிகவும் கவனமாக கொடுத்தால் நல்லது.

ஸ்டேப் 1

முதலில் 1967 என்கிற எண்ணிற்கு நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டும். அப்படி கொடுக்கும் நேரத்தில் தமிழ் என்கிறதை செலக்ட் செய்தால் சம்மந்தப்பட்ட சேவை அதிகாரி உங்களிடம் பேசுவார்.

ஸ்டேப் 2

அப்படி அவர் பேசும் நேரத்திற்குள் உங்கள் வீட்டில் உள்ள ஏதோ ஒருவர் ஆதார் கார்டு மற்றும் குடும்ப அட்டை ஆகியவற்றை எடுத்து கொள்ள வேண்டும்.

ஸ்டேப் 3

பிறகு சேவை அதிகாரிடம் நீங்கள் மாற்ற அல்லது சேர்க்க விரும்பும் தொலைபேசி எண்ணை சொன்னால் ஒரு பத்து நிமிடத்திற்குள் அப்டேட் ஆகி விடும்.

ஸ்டேப் 4

மேலே சொன்ன வழிமுறை நடைமுறையில் இல்லை என்றால் நேரிடையாக தாலுகா அலுவலகத்திற்கு சென்று தான் மாற்ற வேண்டும்.

குறிப்பு 

ரேஷன் கடைகளில் உங்களுடைய போனே நம்பர் மாற்ற மாட்டார்கள். மேலும் ரேஷன் கடையில் பொருட்கள் மட்டும் தான் கொடுப்பார்கள்.

அட்டை தொடர்பான சேவை நிலை அறிய

Tnpds