ரேஷன் கார்டு பெயர் நீக்கம் செய்வது எப்படி

ரேஷன் கார்டு பெயர் நீக்கம் செய்வது எப்படி - பொதுவாக ரேஷன் கார்டில் பெயர் ஒன்று மட்டும் தான் இருக்க வேண்டும். ஒரு சில காரணத்தினால் அல்லது தவறுதலாக இன்னொரு ரேஷன் அட்டையில் பெயர் இருப்பது சிக்கலில் சென்று விடும். ஒரு சில நேரங்களில் பழைய அட்டையில் உள்ள பெயரை நீக்கி புதிய ரேஷன் அட்டையில் சேர்ப்பதற்கு மக்கள் அவதிபட்டுவருகின்றனர். நீங்கள் நேரிடையாக குடும்ப உறுப்பினர் நீக்கம் செய்வதற்கு முன்னர் தொலைபேசி எண்ணை ரெஜிஸ்டர் செய்து இருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் பதிவு செய்யாமல் இருந்தால் முதலில் பதிவு செய்த பின்னர் கீழே உள்ள படிகளை பின்பற்றவும்.

ரேஷன் கார்டு தொலைந்துவிட்டது எப்படி வாங்குவது

ரேஷன் கார்டு பெயர் நீக்கம் செய்வது எப்படி


நீக்கம் செய்ய தேவையான ஆவணங்கள் 

1. திருமண சான்றிதழ் 

2. தத்தெடுப்பு சான்றிதழ் 

3. இதர சான்றிதழ் 

Tnpds பெயர் நீக்கம் 

முதலாவதாக நீங்கள் Tnpds வெப்சைட் செல்லவும். சென்ற பின்னர் மின்னணு அட்டை தொடர்பான சேவைகளில் குடும்ப உறுப்பினர் நீக்க சூஸ் செய்யவும். தொலைபேசி  என்டர் செய்து உள்ளே லாகின் செய்யுங்கள். இதையெல்லாம் செய்த முடித்த பின்னர் உங்கள் குடும்ப அட்டை விவரங்கள் மற்றும் அதில் யாரை நீக்க விரும்புகிறார்களோ அதை தேர்வு செய்ய செயலில் என்பதை சூஸ் செய்து டாக்குமெண்ட்ஸ் யை அப்லோட் செய்யவும்.

குடும்ப அட்டை எண் விவரம்


மேலே சொன்ன அனைத்து விஷயங்களையும் செய்த பின்னர் மறுபடியும் Tnpds வெப்சைட் முகப்பிற்கு சென்று அட்டை தொடர்பான சேவை நிலை அறிய என்று கொடுத்தால் இரண்டு விதமான updates இருக்கும். ஒன்று கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டது மற்றொன்று அனுமதிக்கப்பட்டது.


குறிப்பு 

உங்கள் அட்டையில் உள்ள பெயரை நீக்கம் செய்து கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் அனுமதிக்கப்பட்டது என்றும் நிறைவேறவில்லையென்றால் நிராகரிக்கப்பட்டது என்றும் உங்கள் முகப்பு பேஜ்க்கு வரும். புதிதாக ஒரு குறிப்பு எண் ஒன்று வழங்கப்படும். அந்த குறிப்பு எண்ணை வைத்து தான் உங்கள் ஸ்டேட்டஸ் பார்க்க முடியும். இதன் கோரிக்கைகள் குறைந்தது 15 நாட்கள் அதிகபட்சமாக 30 நாட்கள் ஆகும்.

நியூ ரேஷன் கார்டு அப்ளை ஆன்லைன் தமிழ்நாடு