ரேஷன் கார்டு செய்திகள் 2024 - ரேஷன் கடைகள், விண்ணப்பம், அட்டை, போன் நம்பர் மாற்றுதல் மற்றும் புகார்களை இந்த செய்திகள் மூலம் எளிதில் பார்க்கலாம். தமிழ்நாடு அரசு எப்போது ரேஷன் சம்மந்தப்பட்ட சுற்றறிக்கை விடுகிறதோ அந்த நேரத்திலே இங்கே அப்டேட் செய்ய படும். இதனால் மக்கள் எளிதில் உங்கள் ரேஷன் சம்மந்தப்பட்ட செய்திகளை அறியலாம்.
அப்டேட் மே 13, 2022
ரேஷன் கார்டு அல்லது ஸ்மார்ட் கார்டு சம்மந்தப்பட்ட விஷயங்கள் பெயர் சேர்த்தல், நீக்குதல், போன் நம்பர் சேர்த்தல் மற்றும் நீக்கம் மற்றும் அட்டை தொடர்பான இதர சேவைகளை பெற முகாம் ஒன்று சென்னையில் நடக்கிறது. சென்னையை சுற்றியுள்ள பத்தொன்பது மண்டல உதவி அலுவலங்களுக்கு சென்று உங்கள் பிரச்சனைகளை சரி செய்து கொள்ளுங்கள். மற்ற மாவட்டங்களின் இலவச மக்கள் குறை தீர்க்கும் முகாம் அடுத்து வரும் மாதங்களில் செயல்பட உள்ளது.
அப்டேட் ஏப்ரல் 13, 2022
இரண்டு கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு இனிமேல் ஆவின் பால் சேர்ப்பதாக அரசு அறிவித்துள்ளது. இந்த உத்தரவு வரும் நாட்களில் நடைமுறை படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்டேட் 14, மார்ச், 2022
இந்த மார்ச் 14, 2022 அன்று வந்த சுற்றறிக்கை என்னவென்றால் ரேஷன் கடைகளில் மக்கள் வார வாரம் அல்லது மாத மாதம் அரசு தரக்கூடிய பொது விநியோக பொருட்களை வாங்குகின்றனர். மேலும் இப்போதைய நிலையில் பயோ மெட்ரிக் சிஸ்டம் அதாவது குடும்ப தலைவர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் யாரவது கை ரேகை பயன்படுத்தி தான் விநியோக பொருட்களை வாங்க முடியும். ஏனென்றால் முன்னர் எல்லாம் தங்களது குடும்ப அட்டையை வேறு ஒரு நபர் ஒருவர் வாங்கி கொண்டு பொருட்களையும் அரசு தரும் ஊதியங்களையும் வாங்கி உள்ளார்கள்.
அப்டேட் 17, மார்ச் 2022
மக்கள் வேறு ஒரு இடத்திற்கு பயணமோ அல்லது மொத்தமாக இடம்பெயர்ந்து சென்றாலோ அவர்கள் இருக்கும் இடத்திலே ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ள முடியும். உங்களுடைய ஆதார் அட்டை காண்பித்து பயோ மெட்ரிக் செய்தாலே உங்கள் ரேஷன் அட்டை பொருட்களை வழக்கம் போல் வாங்கி கொள்ளலாம்.
அப்டேட் 20, மார்ச் 2022
பயனாளர்கள் தங்கள் பொருட்களை எங்கு வேண்டுமானாலும் வாங்கி கொள்ளலாம். பிற ஊர்களில் வேலைகளுக்கு செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கின்ற மக்களுக்கு தங்கள் ரேஷன் பொருட்களை வாங்க மிகவும் சிரமமாக இருக்கும். அதனால் நீங்கள் வேளைக்கு செல்கின்ற இடத்திலே கூட உங்கள் ஆதார் எண்ணை வைத்து மட்டுமே பொருட்களை வாங்கலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதனால் மக்களும் மிகவும் பயன் அடைவார்கள். அதே சமயத்தில் போலி ரேஷன் அட்டையை தவிர்க்க முடியும் என்று கூறியுள்ளார்கள். இது வரைக்கும் தோராயமாக ஏழு கோடி மக்கள் இந்த திட்டத்தை பயன்படுத்தி பலன் அடைகின்றனர்.
ரேஷன் கார்டு தொலைந்துவிட்டது என்ன செய்வது
ரேஷன் நியூஸ்
அது மட்டுமில்லாமல் மற்றவர் ரேஷன் பொருட்களை அவர்களுக்கே தெரியாமல் வாங்கி கொள்வதற்கும் போன்ற நிகழ்வுகள் ஏராளமாக இருந்தது. இதனை கட்டுப்படுத்தவே அரசாங்கம் பயோ மெட்ரிக் முறையை கொண்டு வந்தது.
60 வயதிற்கு மேல் உள்ளவர்களும் சிஸ்டம் குளறுபடிகளாலும் பயோ மெட்ரிக் முறை வேலை செய்யாமல் மக்கள் வீட்டிற்கே திரும்பி செல்கின்றனர். இதனால் தமிழக மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். இதனால் அரசாங்கம் ஸ்மார்ட் கார்டினை எடுத்து கொண்டு வரும் குடும்ப தலைவர், தலைவி அல்லது அந்த குடும்ப உறுப்பினர்கள் தங்கள் ஸ்மார்ட் கார்டினை விநியோகம் செய்பவர்களிடம் கொடுத்து ஸ்கேன் செய்தாலே போதுமானது என சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளார்கள்.