ரேஷன் கார்டு தொலைந்து விட்டது எப்படி வாங்குவது

ரேஷன் கார்டு தொலைந்து விட்டது எப்படி வாங்குவது - ரேஷன் கார்டு தொலைந்தால் நாம் யாருமே கவலைப்பட தேவையில்லை. அதனை எளிதான முறையில் மறுபடியும் ரூபாய் 20 கட்டணத்தில் வாங்க முடியும். இதற்காக நாம் எந்த ஒரு அலுவலகத்திற்கும் சென்று அலைய தேவை இல்லை. ஆன்லைனில் Tnpds வெப்சைட் சென்று லாகின் செய்து தொலைந்த ரேஷன் அட்டையை வாங்கலாம்.

ரேஷன் கார்டு இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்

உங்கள் ரேஷன் கார்டு தொலைந்தாலோ அல்லது ரேஷன் கார்டு கிழிந்து போனாலோ மறுபடியும் நாம் நகல் மின்னணு அட்டையை வாங்கி கொள்ளலாம். இதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதனை பின்பற்றி உங்கள் மின்னணு அட்டையை பெறுங்கள்.

ரேஷன் கார்டு தொலைந்து விட்டது எப்படி வாங்குவது


1. முதலில் நகல் மின்னணு அட்டை விண்ணப்பிக்க என்கிறதை செலக்ட் செய்தால் உங்கள் குடும்ப அட்டை விவரங்கள் அனைத்தும் மற்றும் இதர விவரங்கள் அனைத்தும் அதில் இருக்கும்.


2. இதில் மறுபதிப்பு கோரிக்கை வகை choose செய்தால் அட்டை பிறழ்வுகள் மற்றும் அட்டை தொலைந்துவிட்டது என்று இரண்டு தலைப்புகள் இருக்கும். அதில் ஒன்றை choose செய்து அதற்கான விளக்கத்தினை அந்த கட்டத்தில் கொடுக்கவும்.

3. அப்படி கொடுத்தால் உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று வரும். மேலும் அதற்கான குறிப்பு எண் ஒன்று வழங்கப்படும். 

4. அந்த விண்ணப்பத்தின் நிலையை காண முதலில் நகல் மின்னணு அட்டை விண்ணப்பத்தின் நிலையை தேர்வு செய்யவும்.


5. குறிப்பிட்ட தேதிக்குள் Taluk Supply Office இடம் உங்கள் reprint ஸ்மார்ட் கார்டு வந்தவுடன் உங்களுக்கு செய்தி வரும். அப்படி வரும் பட்சத்தில் 20 ரூபாய் கட்டணம் செலுத்தி உங்கள் மின்னணு அட்டையை பெற்று கொள்ளுங்கள்.

அட்டை தொடர்பான சேவை நிலை அறிய

குடும்ப அட்டை பெயர் நீக்கல் சான்று