Rti முதல் மேல்முறையீடு மனு pdf ( மேல்முறையீட்டு அலுவலர் ) - தகவல் அறியும் சட்டத்தின் மூலம் ஒரு தனிப்பட்ட நபர் அரசு சார்ந்த துறைகளில் தகவல்கள் கேட்டு அறிந்து கொள்ள முடியும். இதனால் மக்கள் வீட்டிலிருந்தபடியே தகவல்களை கொள்ள இயலும்.
அனைத்து அரசாங்க துறைகளில் ஒரு பொது தகவல் அலுவலர் இருப்பார். நாம் முதலில் அவருக்கு தான் மனு செய்ய வேண்டும். பிரிவு 6 உட்பிரிவு 1 இன் கீழ் தகவல்களை கேட்கலாம். அவர் அதனை 30 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். அப்படி அவர் தகவல் அளிக்க வில்லை என்றால் பிரிவு 19 உட்பிரிவு 1 யை பயன்படுத்தி மேலும் ஒரு மனு செய்யலாம்.
இதையும் படிக்க: பொது தகவல் அலுவலர் முகவரி
முதலில் மனு அளிக்கும்போது பொது தகவல் அலுவலர் என்று குறிப்பிட வேண்டும். இரண்டாவதாக மனு செய்யும்போது பிரிவு எண் மற்றும் பெறுநரில் மேல் முறையீடு அலுவலர் என குறிப்பிட வேண்டும். மேலும் முதல் மனு அனுப்பிய தேதி, அலுவலருக்கு கிடைக்கப்பெற்ற நாள், நகல் அனைத்தும் முதல் மேல்முறையீடு செய்யும்போது இணைக்க வேண்டும்.
இதையும் படிக்க: தகவல் அறியும் உரிமை சட்டம் மாதிரி மனுக்கள் pdf
குறிப்பு
பிரிவு 2 ( f ) இன் படி தான் மனு எழுத வேண்டும். உதாரணமாக கேள்வி எழுப்பல், கையொப்பம் இல்லாமலிருந்தால், முத்திரை வில்லை இல்லாமல் இருப்பது, நீண்ட காலம் தகவல்கள் கேட்பது என பத்திற்கும் மேற்பட்ட காரணங்களுக்காக உங்கள் மனு நிராகரிக்கப்படலாம்.