சந்திராஷ்டமம் அன்று செய்ய கூடாதவை - மாதத்தில் ஒவ்வொரு ராசியினருக்கும் இரண்டை கால் நாள் இந்த சந்திர அஸ்தம் வருகின்றன. இந்த நாள் வரும்போது எதையும் செய்யக்கூடாது என்று நமது முன்னோர்கள் மற்றும் வீட்டு பெரியோர்கள் கூறியுள்ளார்கள். ஏனெனில் அருள்மிகு சந்திர பகவான் அவர்கள் மனோகாரர் ஆவார். இந்த நாளில் சந்திர கிரகம் அஸ்தம ஸ்தானத்திற்கு சென்று விடும். அதாவது ஒருவர் ராசியில் இருந்து எட்டாம் ராசியில் சந்திரன் மறைந்திருப்பார் அல்லது அவருடைய முழு பலமும் இழந்திருப்பார். இதனால் மனரீதியாகவும், மன குழப்பங்களாலும் மற்றும் சரியான முடிவெடுக்க முடியாமலும் திணற வாய்ப்புள்ளது. மேற்கண்ட காரணங்களால் தான் இந்த நாள் வரும்போது சுப காரியங்கள் செய்யக்கூடாது என்று சொல்லி இருப்பார்கள்.
பொதுவாக ராசியில் சந்திராஷ்டமம் பார்ப்பதா அல்லது நட்சத்திரத்தில் பார்ப்பதா என்கிற சந்தேகங்கள் அதிக எழக்கூடும். ராசியில் பார்த்தால் பொது பலன்களும், நட்சத்திரத்தில் பார்த்தால் துல்லிய பலன்களும் கிடைக்கும். இரண்டும் சேர்ந்து பார்ப்பது நல்லது.
சந்திராஷ்டமம் என்று தவிர்க்க வேண்டியவை
1. சந்திராஷ்டமம் அன்று திருமணம் செய்யலாமா
செய்யக்கூடாது.
2. சந்திராஷ்டமம் அன்று மொட்டை அடிக்கலாமா
வேண்டாம்.
சற்று முன்: தாலி கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்