வளர்பிறை சஷ்டி விரதம் 2024 நேரம் மற்றும் நாட்கள் ( valarpirai sashti dates 2024 tamil ) - அருள்மிகு கந்தனுக்கு மனிதர்களாகிய நாம் விரதமானது மாதத்திற்கு இருமுறை வீதம் என கடைப்பிடிக்கலாம். இதில் ஒன்று வளர்பிறையும் இன்னொன்று தேய்பிறையாகும். இதில் உங்களுக்கு எந்த பிரச்சனையோ குறைய வேண்டுமோ அப்போது தேய்ப்பிறையில் வருகின்ற சஷ்டி திதியை உபயோகித்து கொள்ளலாம். எது உங்களுக்கு நடக்க வேண்டுமோ அப்போது வளர்பிறையில் வருகின்ற சஷ்டி நாளினை உபயோகித்து கொள்ளலாம்.
மாத சஷ்டி விரதம் கடைபிடிக்கும் முறை மற்றும் உணவு முறை
மாதத்தில் வருகின்ற இரண்டு பிறைகளிலும் நாம் விரதத்தினை மேற்கொள்ளலாம். காலையில் எழுந்து குளித்து விட்டு முருகப்பெருமானின் திருவுருவப்படத்திற்கு மாலை அல்லது பூ அணிவித்து பால், பழம் மற்றும் வெற்றிலைப்பாக்கு கொண்டு வணங்கலாம். காலையில் சாமியை தரிசனம் செய்ய முடியாதவர்கள் காலை நேரத்தில் சாமியை வணங்கிவிட்டு மாலை நேரத்தில் மேற்கண்ட பொருள்களை கொண்டு பூஜை செய்யலாம். மேலும் மாலை பூஜை முடிந்த பிறகு தான் சாப்பிட வேண்டும். உடல் ஆரோக்கியம் சரியில்லாதவர்கள் பழம் சாப்பிட்டு கொள்ளலாம்.
வளர்பிறை சஷ்டி 2024 ஜூலை நாள்
வருகின்ற ஜூலை மாதம் 11 ஆம் நாள் ( ஆனி 13 ) வருகின்றது.
பிறந்த கிழமையில் மொட்டை அடிக்கலாமா