Slr ஆவணம் என்றால் என்ன ( Slr copy for land, Slr land records tamilnadu ) - இதனை ஆங்கிலத்தில் Settlement Land Register எனலாம். ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு ஆவணங்களை வருவாய்த்துறை பராமரிக்கிறது. அந்த வகையில் 1923 முதல் 1955 வரையும் Slr ஆவண பட்டா தயாரித்தது. இந்த காலங்கள் எல்லாம் Udr க்கு முந்தைய ஆவணங்கள் என்றும் சொல்லலாம்.
இந்த ஆவணம் தயாரிப்பதற்கு மூல காரணம் என்னவென்றால் ஜமீன் நிலங்கள், இனாம் நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள், மானியவரியத்தில் கொடுக்கின்ற நிலங்கள் என அனைத்து விதமான நிலங்களையும் பதிவேற்ற இந்த காலம் தேவைப்பட்டது.
இதையும் காண்க: TamilNilam
இப்போது உள்ள பட்டாக்களில் தற்போது யாரிடம் நிலம் உள்ளது மற்றும் யார் உரிமையாளராக இருக்கிறார் என்பதனை தெளிவாக mention செய்திருப்பார்கள். ஆனால் அப்போது உள்ள Slr பட்டாக்களில் சர்வே எண்கள் மட்டுமே கொடுக்கப்பட்டு இருக்கும். மேலும் யாரிடம் இருந்து பெறப்பட்டது மற்றும் அது உங்களுக்கு எப்படி வந்தது என்கிற விவரங்களும் அடங்கியிருக்கும்.
இதையும் காண்க: eservices.tn.gov.in patta chitta
இந்த ஆவணம் ஒரு சிலருக்கு இப்போது தேவைப்பட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேர்முக உதவியாளரிடமும், மத்திய நில அளவை துறையிலும் மற்றும் நில ஆவண காப்பகத்திலும் கிடைக்கும்.
இதையும் படிக்க: Tnreginet. gov. in patta