ஸ்மார்ட் கார்டில் பெயர் சேர்ப்பது எப்படி, சேர்த்தல், அப்ப்ளிகாடின் ஸ்டேட்டஸ் - ஸ்மார்ட் கார்டு என்றால் குடும்ப அட்டை அல்லது ரேஷன் கார்டு ஆகும். ஒரு ஸ்மார்ட் அட்டையில் புதிதாக பெயர் சேர்ப்பதென்றால் மிகவும் சுலபமே. ஆனால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண் அவசியம். தொலைபேசி எண் இல்லையென்றால் மாவட்ட தாலுகா வழங்கல் அதிகாரியை தான் தொடர்பு கொள்ள வேண்டும்.
Tnpds இல் எந்த வித மாற்றம் செய்யவேண்டுமென்றாலும் மின்னணு அட்டை என்கிற தலைப்பை சூஸ் செய்ய வேண்டும். ஆனால் புதிதாக மின்னனு அட்டை பெறுவோர் அல்லது நகல் விண்ணப்பம் போன்றவைகளையெல்லாம் சரிப்பார்க்க சேவைகள் என்கிற Options யை பயன்படுத்த வேண்டும்.
இதையும் பார்க்க: குடும்ப அட்டை status
இதற்கு இரண்டே இரண்டு ஆவணங்கள் இருந்தாலே போதுமானது. ஒன்று ஆதார் அட்டை மற்றொன்று பிறந்த சான்றிதழ் ஆகும் ( ஏதாவது ஒன்று ). மற்ற ஆவணங்கள் இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும். ஆதார் அட்டையை பயன்படுத்தி கொள்வது நல்லது . ஏனெனில் ஆதார் அட்டையை கட்டாயம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இணைக்க வேண்டுமென்பதால் ஆதார் அட்டையை பயன்படுத்தி கொள்ளலாம்.
இதையும் பார்க்க: ஆதார் அட்டை பெயர் திருத்தம் செய்ய தேவையான ஆவணங்கள்