சொத்து மதிப்பு பார்க்க - இரண்டு வழிகளில் நாம் நம்முடைய சொத்திற்கு மதிப்பினை தெரிந்து கொள்ள முடியும். இதில் அரசாங்க வழிகாட்டி மதிப்பு மற்றும் சந்தை மதிப்பு ஆகும். முதலில் அரசாங்க வழிகாட்டி மதிப்பில் இருந்து தான் ஒரு சொத்தினை பதிவு செய்ய முடியும். அது குறைந்தபட்ச மதிப்பாகவும் இருந்தாலும் சரி அல்லது அதிகபட்ச மதிப்பாகவும் இருந்தாலும் சரி அரசு நிர்ணயித்த மதிப்பில் இருந்து ஒரு ரூபாய் கூட குறைய கூடாது.
அரசாங்க வழிகாட்டி மதிப்பில் இருந்து நமது சொத்தின் மதிப்பை எவ்வாறு பார்ப்பது
1. Tnreginet வெப்சைட் செல்ல வேண்டும்.
2. வழிகாட்டி மதிப்பு சூஸ் செய்ய வேண்டும்.
3. தெரு, புல எண் என்டர் செய்யவும்.
4. புல எண் தெரிந்தால் உங்கள் சொத்தின் எக்ஸாக்ட் மதிப்பு தெரிந்து விடும்.
5. 10 மண்டலங்களில் உங்கள் மண்டலம் எது என தேர்வு செய்யவும்.
6. சார் பதிவாளர் அலுவலகம், பதிவு கிராமம் மற்றும் எவ்வகை நிலம் வகைப்பாடு என தேர்வு செய்யவும்.
7. சதுர அடி மற்றும் சதுர மீட்டரில் மதிப்புகள் காண்பிக்கப்படும்.
இதையும் பார்க்க: தமிழக அரசு வீடு வழங்கும் திட்டம்
சந்தை மதிப்பு
இதனை மார்க்கெட் மதிப்பும் என்று சொல்லலாம். இது அரசாங்க விலையோடு கூடுதலாகவும் அல்லது குறைவாகவும் வரும். பெரும்பாலும் கூடுதலாக தான் இருக்கும். இது பக்கத்துக்கு நிலங்கள், மனைகள் அல்லது டவுன் ஏரியாக்களில் செல்கின்ற மதிப்பின் படி கணக்கிடப்படுகின்றன.
இதையும் பார்க்க: EC வில்லங்க சான்று பார்க்க