சொத்து வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

சொத்து வாங்கும் போது கவனிக்க வேண்டியவை - இடம், நிலம், விவசாய நிலம், காலி மனை அல்லது வீட்டு மனை போன்ற அசையா சொத்துக்களை வாங்கும் முன்னர் நாம் பார்க்க வேண்டிய விஷயங்கள் ஏராளம். ஏனெனில் முறைகேடுகள் ஏராளம் குவிந்த வண்ணம் தற்போது வலம் வந்து கொண்டே இருக்கிறது. இருந்தபோதிலும் மக்கள் அவர்கள் தேவைக்கு நிலங்களை வாங்கி கொள்கின்றனர்.

சொத்து வாங்கும் போது கவனிக்க வேண்டியவை


சொத்து என்பது நிலத்தினை மட்டுமே சார்ந்ததில்லை. வீடுகள், தோப்புகள், மனைகள், அசையும் சொத்துக்களான வாகனங்கள் மற்றும் இதர பொருட்களும் சொத்தில் அடங்கியவை. இதில் பெரும்பாலும் அசையாச்சொத்துக்களான மனைகள், நிலங்கள் தான் வாங்கும் முன்னர் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

விவசாய நிலத்தில் வீடு கட்டலாமா

சரிபார்க்க வேண்டிய விவரங்கள் மற்றும் ஆவணங்கள்

1. பட்டாவில் பெயர் மாற்றம் சரியானதாக இருக்க வேண்டும்.

2. காலி மனை என்றால் வரிகள் செலுத்தி அதற்குண்டான ரசீதும் அவசியம்.

3. வீடு கட்டுவதற்கு வாங்கும் நிலம் என்றால் அது வீட்டடி மனையா என ஆராய்தல்.

4. நிலம் குத்தகைக்கு விடப்பட்டிருந்தால் அதனை முழுவதுமோ அல்லது இடையில் முடிக்கும் நிலை ஏற்பட்டால் சம்பந்தப்பட்டவரிடம் ஒப்புதல் அவசியம்.

5. வீட்டடி மனை வாங்கும் போது அப்ரூவல் அவசியம்.

6. பவர் பத்திரமாக நிலம் பதிவு செய்திருந்தால் கூடுதல் கவனம் தேவை.

7. மூலப்பத்திரமும் அதற்கு பின்னர் வந்த மற்ற பத்திரங்கள், சான்றிதழ்கள் சரியாக இருக்க வேண்டும்.

8. பாகப்பிரிவினை செய்திருந்தால் அனைவரின் ஒப்புதல் அவசியம்.

9. வில்லங்க சான்றிதழ் 30 வருடங்களுக்கு எடுத்து செக் செய்தல்.

10. நேரடியாக பார்க்கும் நிலத்தின் அளவீடுகள், பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகள் மற்றும் வரைபடத்தில் இருக்கும் அளவுகள் இவை மூன்றும் ஒரே மாதிரியாக இருக்கும் பட்சத்தில் நல்லது.

11. அடமானம் வைத்திருந்தால் கவனம் தேவை.

12. உயில் எழுதி வைத்திருந்து அந்த இடம் உங்களுக்கு விற்க நேர்ந்தால் அப்போது நீங்கள் அந்த உயில் மெய்ப்பித்திருக்கிறதா என ஆராய வேண்டும்.

13. இவை அனைத்தும் சரியாக இருந்தாலும் நோட்டரி வழக்கறிஞர் மற்றும் பத்திர எழுத்தர் கொண்டு செக் செய்யுங்கள்.

அங்கீகாரமற்ற மனைகளை பதிவு செய்வது எப்படி