சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் - போஸ்ட் ஆபீஸ் மிகவும் பிரபலமான திட்டத்தில் ஒன்றாக இது திகழ்கிறது. இதனை செல்வமகள் சேமிப்பு திட்டம் எனலாம்.பொதுவாகவே செல்வ மகள் சேமிப்பு திட்டமென்று தான் இதனை அழைப்பார்கள். பயனாளர்கள் இரண்டும் வேறு வேறு திட்டங்கள் என நினைத்து கொள்வதுண்டு. இது பெண் குழந்தைகளுக்கான திட்டம் என அனைவரும் அறிந்த ஒன்று தான். பத்து வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் மட்டுமே இதற்கு தகுதியானவர்கள் ஆக கருதப்படுவார்கள்.
இந்த பட்டாசிட்டா.கோ.இன் இணையத்தளத்தில் இந்த திட்டத்தில் மாத மாதம் அல்லது வருடத்திற்கு இவ்வளவு பணம் கட்டினால் இவ்வளவு கூட்டுத்தொகை கிடைக்கும் என்பதை கீழே தருகிறோம். அதனை பார்த்து நீங்கள் எவ்வளவு சேமிப்பு பணத்தை கட்டுவீர்கள் மற்றும் அதனால் உண்டாகும் வட்டி வீதம் பற்றி அறிந்து கொள்ள முடியும்.
மாதம் முடிவு தொகை
1. 250 - 1, 27, 593
2. 500 - 2, 55, 190
3. 750 - 3, 82, 784
4. 1000 - 5,10, 373
5. 1250 - 6, 37, 961
6. 1500 - 7, 65, 555
7. 1750 - 8, 93, 148
8. 2000 - 10, 20, 744
9. 2250 - 11, 48, 334
10. 2500 - 12, 75, 929.
குறிப்பு
மேற்கண்ட கால்குலேட்டர் அட்டவணையில் இடது பக்கம் உள்ள எண்கள் மாத மாதம் நீங்கள் செலுத்தும் பணமாகும். ஒவ்வொரு எண்களுக்கு பக்கத்தில் உள்ள எண்கள் ஒட்டுமொத்த தொகை ஆகும். இதில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் மாத மாதம் சரியான தொகை கட்டினால் மட்டுமே அப்டேட் செய்திருக்கும் தொகை உங்களுக்கு கிடைக்கும்.
பொது வருங்கால வைப்பு நிதி