SURVEY NUMBER IN TAMIL PATTA

Survey Number in tamil Patta ( Survey no in tamil ) - சர்வே நம்பர் என்பது நிலத்தின் உரிமை தன்மையை காட்டும். இந்த சர்வே நம்பர் மூலம் ஒருவரின் நிலம், வரைபடம், பட்டா எண், சொத்தின் நகல், வில்லங்கம் மற்றும் வழிகாட்டி மதிப்பு போன்றவை தெரிந்து கொள்ள முடியும். அந்தளவு சர்வே எண் மிகவும் முக்கிய எண்ணாக கருதப்படுகின்றது.

Survey Number in tamil


ஒவ்வொரு நிலத்திற்கு ஏற்ப சர்வே எண்கள் கொடுக்கப்படும். இப்போது இருக்கின்ற சர்வே எண்கள் அனைத்தும் ரீ சர்வே மூலம் பெறப்பட்டது ஆகும். இதற்கு முன் ஒரு சர்வே எண்கொடுக்கப்பட்டிருக்கும்.

பழைய சர்வே எண்களை தெரிந்து கொள்ள RSR, Osr, Udr போன்றவைகள் அவசியமாகும். இந்த பழைய ஆவணங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், நில அளவை துறையிலும் அல்லது ஆவண காப்பகத்திலும் கிடைக்கும்.

இதையும் பார்க்க: Natham Poramboke Land patta online

ஒவ்வொரு கிராமத்திற்கும் சரி நகரத்திற்கும் சரி அதன் எல்லைகளில் இருந்து சர்வே எண்கள் தொடங்கப்படும். நிலத்தினை பிரிக்கும் போது மட்டுமே உட்பிரிவு எண்ணாக மாறுகிறது. மேலும் அது தனி பட்டா நிலமாகவே கருதப்படும்.

இதையும் பார்க்க: பட்டா சிட்டா வரைபடம்