சூரிய கடவுளுக்கான கோவில் உள்ள இடம்

சூரிய கடவுளுக்கான கோவில் உள்ள இடம் ( எங்கு உள்ளது ) ( surya kadavul kovil ulla idam ) - அருள்மிகு சூரிய பகவான் அவர்கள் நவகிரகங்களில் ஒன்றாக திகழ்கிறார். ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு மிகுந்த தினமாக உள்ளது. அன்றைய தினம் சூரிய பகவானை வழிபடலாம். சூரியனுக்காக கோவில் கட்டப்பட்டுள்ள இடம் எது என்றால் அது ஒடிசாவில் உள்ள கொனார்க் எனும் இடம் தான்.

சூரிய ஒளி அமைப்பு மொத்தம் மூன்று உள்ளது. அவைகள் உதயம், நண்பகல் மற்றும் மாலை அஸ்தமனம் நேரமாகும். இவைகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி சூரிய கோவில்கள் உள்ளது. அதில் முதலில் உள்ளது உதயம் தான் இந்த கோனார்க் கோவில் ஆகும்.

சூரிய கடவுளுக்கான கோவில் உள்ள இடம்


வரலாறு

13 ஆம் நூற்றாண்டில் நரசிம்மரால் கட்டப்பட்டது இது. இந்த கோவிலில் தூண்கள் இருப்பதில்லை. ஏனெனில் ஒவ்வொரு கற்களுக்கும் இடையில் இரும்புகள் மற்றும் காந்தங்கள் இருக்கின்றன. மேலும் இது சிவப்பு மணல்பாறையிலும் கருப்பு கிரானைட் கற்களிலும் உருவாக்கப்பட்டது. இந்த கோவிலின் சிறப்பம்சம் என்னவென்றால் நுழைவுயிலே இரண்டு சிங்க கற்கள், ஏழு குதிரைகள் மற்றும் கோவிலினை சுற்றி இருபத்தி நான்கு சக்கரங்கள் உள்ளன. இதில் ஏழு என்பது நாட்களையும் இருபத்தி நான்கு என்பது ஒரு நாளில் உள்ள மணி நேரத்தினையும் குறிக்கும்.

இதையும் படிச்சிட்டு போங்க: ராகு கேது பெயர்ச்சி எப்போது

விசேஷம்,  நடை திறப்பு நேரம் மற்றும் கட்டணம்

இந்த கோவிலில் மகா சப்தமி அல்லது ரத சப்தமி நாட்களில் விசேஷங்கள் நடைபெறும். இந்த கோவிலினை சுற்றி பார்க்க இந்தியர்களுக்கு நுழைவு கட்டணமாக ரூபாய் 40 வீதம் வசூல் செய்யப்படுகிறது. வெளிநாட்டு மக்களுக்கு ரூபாய் 600 வசூல் செய்யப்படுகிறது. காலையில் 06 மணி முதல் மாலை 08 மணி வரையும் கோவில்களுக்கு மக்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். பிப்ரவரி மற்றும் அக்டோபர் மாதங்களில் மக்கள் இங்கு சென்றால் சிறப்பானதாக இருக்கும்.

இதையும் தெரிஞ்சிக்கோங்க: சப்தமி திதி