Tamil vidukathaigal - விடுகதை இன்றயை காலகட்டத்தில் பேசுவது சற்று குறைவு தான். 2000 ஆண்டுகளில் பள்ளி பருவத்தில் இத்தகைய விடுகதைகள் கேட்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அதிகம். அதும் இல்லாமல் அதற்க்காக போட்டிகள் நடத்துவார்கள். இது மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் என்பதே உண்மை என்றால் மிகையாகாது.
ஆனால் இப்பொழுது அதற்காக மாணவர்கள் time ஸ்பென்ட் பண்ணுவதில்லை. எதற்க்காக என்று இன்றளவும் அது புரியவில்லை. இப்பொழுது கூட விடுகதைகளை மாணவர்கள் தேடி வருகின்றனர். இங்கே அனைத்து விதமான விடுகதைகளும் நாங்கள் அப்லோட் செய்துள்ளோம் அதாவது குழந்தைகள், பெரியவர்கள், அறிவியல், வரலாறு மேலும் பல. இது வெறும் கேள்விகள் மட்டும் அல்ல. மாறாக மாணவர்களின் புத்திசாலித்தன்மையை அதிகமாக காட்டக்கூடும் என்பதே உண்மை. கீழே நாங்கள் ஒவ்வொரு விடுகதைகள் பதிவிட்டுளோம்.
1. உடம்பு இல்லாத எனக்கு தலை உண்டு பூ உண்டு நான் யார் Answer
2. வெள்ளை நிறத்தில் இருப்பேன் காற்றில் பறப்பேன் நான் யார்
3. எதை கொடுத்தாலும் சாப்பிடுவேன் தண்ணீர் குடித்தால் இறந்து விடுவேன் நான் யார்
4. கண்ணில்லாத என்னால் அழ முடியும் பார்க்க முடியாது நான் யார் விடை
5. ஊர் ஊராய் சுற்றுவான்
6. படித்தால் பெறலாம் பிடிக்காமலும் விடலாம்
7. அடித்தாலும் உதைத்தாலும் அழ மாட்டான் அவன் யார்
8. அன்றாடம் மலரும் அனைவரையும் கவரும் அது என்ன
9. உணவை எடுப்பான் ஆனால் உண்ண மாட்டான் அவன் யார்
10. எட்டு கைகள் விரிந்தால் ஒற்றைக்கால் தெரியும் அது என்ன
11. நெருப்பில் இருக்கும் கை எது
12. அடி காட்டுக்கு நடு மாட்டுக்கு நுனி வீட்டுக்கு அது என்ன
13. வளமான மரம் வாசலுக்கு உதவாத மரம் அது என்ன
14. மரத்துக்கு மேலே பழம் பழத்திற்கு மேலே மரம் தாயோ கடல்
15. தண்ணீரில் பூக்கும் பூ தலையில் வைக்காத பூ அது என்ன
16. செய்தி வரும் பின்னே மணியோசை வரும் முன்னே அது என்ன
17. தாயோ கடல் தந்தையோ சூரியன் அவன் யார்
18. ஒரு எழுத்து எழுத உதவும் அது என்ன
19. மண்ணில் மறைந்திருக்கும் அது என்ன
20. நன்றிக்கு வால் கோபத்துக்கு வாய் அது என்ன
21. இது ஒரு நான்கு எழுத்து சொல் மண்ணிலே மறைந்திருக்கும்
22. இரண்டாம் எழுத்தை நீக்கிவிட்டால் ஊரையே நாசமாக்கும்
23. முதல் இரண்டும் இனிக்கும்
24. வெள்ளை கொள்ளை கறுப்பு விதை கை விதைக்கும் வாய் கொறிக்கும் அது என்ன
25. பரந்த காட்டேரிக்கு பக்கமெல்லாம் சடை அது என்ன
26. தண்ணீர் இல்லாமல் வளரும் தரை இல்லாமல் படரும் அது என்ன?
27. மேலே மேலே செல்லும் ஆனால் கீழே வராது அது என்ன
28. கண் உண்டு ஆனால் பார்க்க முடியாது அது என்ன
29. கை இருக்கு பிடிக்க முடியாது கால் இருக்கு நடக்க முடியாது அது என்ன?
30. தண்ணீரில் பிறக்கும் தண்ணீரில் மறையும் அது என்ன
31. கடல் இருக்கும் தண்ணீர் இருக்காது நாடு இருக்கும் வீடு இருக்காது அது என்ன
32. ஆடையும் ஆகும் அறிவும் தரும் அது என்ன
33. பூ பூக்கும் காய் காய்க்கும் அது என்ன
34. கத்தி போல் இலை இருக்கும் கவரி மான் பூ பூக்கும் தின்ன பழம் கொடுக்கும் தின்னாத காய் கொடுக்கும் அது என்ன
35. டை கட்டிய காய் எது
36. வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி
37. தலை இல்லாதவன் தலையை சுமப்பவன்
38. பிறக்கும் பொது வால் உண்டு இறக்கும் பொது வால் இல்லை
39. உலகமெல்லாம் பறந்து பறந்து உறங்காமல் அலைகிறாள் அவள் யார் விடுகதை
40. தொடாமல் அழுவான் தொட்டால் பேசுவான் அவன் யார்
41. நடந்தவன் நின்றான் கத்தியை எடுத்து தலையை சீவினேன் மறுபடியும் நடந்தான் அவன் யார்
42. கீழேயும் மேலேயும் மண்
43. கடல் நீரில் வளர்ந்து மழை நீரில் மடிவது என்ன
44. கழுத்து உண்டு தலை இல்லை உடல் உண்டு உயிர் இல்லை கை உண்டு அது என்ன
45. இரவில் வரும் வெளிச்சம் தரும் நிலா அல்ல அது என்ன
46. மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல
47. இது பெண்கள் பயன்படுத்தும் ஒன்று இது மூன்று கலரில் இருக்கும் கருப்பு வெள்ளை ரோஸ்
48. உயிர் இல்லாக் குதிரை ஒய்யாரமாய் ஓடி வருவான் அவன் யார்
49. இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்
50. விரல் இல்லாமல் ஒரு கை
51. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம்- அது என்ன
52. கண்ணீர் விட்டு வெளிச்சம் தருவாள் அவள் யார்
53. அடித்தால் அழுவான் உடைத்தால் சிரிப்பான்
54. வினா இல்லாத விடை அது என்ன
55. உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு
56. குதிரை ஓட ஓட வால் குறையும் அது என்ன
57. காலில் தண்ணீர் குடிப்பான் தலையில் முட்டையிடுவான் அவன் யார்
58. மாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன
59. தமிழ்நாட்டில் வரும் கை Answer
60. பார்ப்பதற்கு ஐந்து கால் எண்ணுவதற்கு நான்கு கால்
61. ஊரெல்லாம் ஒரே விளக்கு அதற்கு ஒரு நாள் ஓய்வு அது என்ன
62. வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ அது என்ன
63. பிடுங்கலாம் ஆனால் நட முடியாது
64. கண் உண்டு ஆனால் பார்க்க முடியாது அது என்ன
65. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
66. உணவாக எதையும் தந்தால் சாப்பிடுவேன்
67. இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதன் அல்ல. - அது என்ன
68. விரல் இல்லாமலே ஒரு கை அது என்ன
69. உடல் சிவப்பு வாய் அகலம் உணவு காகிதம்- நான் யார்
70. ராஜா ராணி உண்டு நாடு அல்ல இலைகள் உண்டு செடிகள் அல்ல
71. நான் சூரியனை கடந்து சென்றால் கூட நிழல் ஏற்படாது
72. பார்த்தால் கல் பல் பட்டால் நீர் அது என்ன
73. தாய் இனிப்பாள் மகள் புலிப்பாள் பேத்தி மணப்பாள் அது என்ன
74. வெள்ளை வயலிலே கருப்பு விதை
75. எட்டாத கொம்பில் மிட்டாய் பொட்டலம்
76. கோணலாக இருந்தாலும் குணமும் சுவையும் குன்றாது அது என்ன
77. காகிதத்தை கண்டால் கண்ணீர் விடும் அது என்ன
78. முகத்தை காட்டுவான் முதுகை காட்ட மாட்டான் அவன் யார்
79. தலையில் வளரும் கை விடுகதை
80. தலையில் கிரீடம் வாய்த்த பழம்
81. தலைக்குள் கண் வைத்திருப்பவன் இவன் மட்டும்தான் அவன் யார்
82. பூமியிலே பிறக்கும் புகையாய்ப் போகும் அது என்ன
83. அடி மலர்ந்து, நுனி மலராத பூ என்ன பூ?
84. கையிலே அடங்கும் பிள்ளை கதை நூறு சொல்லும் பிள்ளை அது என்ன
85. காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை நான் யார்
86. ஒன்பது பிள்ளைக்கு ஒரே குடுமி அது என்ன
87. பெட்டியை ததிறந்தால் பூட்ட முடியாது அது என்ன
88. கல்யாணத்தில் கை படாத பொருள்
89. சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன
90. யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும் அது என்ன
91. அடிக்காத பிள்ளை அலறித் துடிக்குது அது என்ன
92. மழையில் பூக்கும் பூ அது என்ன
93. கையும் இல்லை காலும் இல்லை ஆனால் ஓடிக் கொண்டே இருப்பான் அவன் யார்
94. நெருப்பில் சுட்ட மனிதனுக்கு நீண்ட நாள் வாழ்வு அது என்ன
95. எட்டாத தூரத்தில் தொட்டில் கட்டி ஆடுது அது என்ன
96. நூறு கிளிக்கு ஒரே வாய் அது என்ன
97. நீளவால் குதிரையின் வால் ஓட ஓடக் குறையும் அது என்ன
98. வயதான பலருக்கு புதிதாக ஒரு கை அது என்ன
99. ஒரு கிணற்றில் ஒரே தவளை
100. கருப்பு சட்டைக்காரன் காவலுக்கு கெட்டிக்காரன்
101. ஒரு தட்டு 12 இட்லி 3 கரண்டி அது என்ன
102. முட்டையிலிருந்து வருவேன் முற்றத்திலே திரிவேன் நான் யார்
103. ஒற்றைக்கால் மனிதனுக்கு ஒன்பது கை அது என்ன
104. அடித்து நொறுக்கி அனலில் போட்டால் ஆவியாகத் தோன்றி அழகாய் மணக்கும் அது என்ன
105. மழையோடு வருகின்ற மஞ்சள் புறாவை வெட்டினால் ஒரு சொட்டு இரத்தம் வரத்து அது என்ன
106. அடிமேல் அடி வாங்கி சொக்க வைக்கும் அது என்ன
107. உணவு கொடுத்தால் வளரும் நீர் கொடுத்தால் அழியும் அது என்ன
108. ஒளி கொடுக்கும் விளக்கு அல்ல ஸ்சடு கொடுக்கும் தீ பளபளக்கும் அல்ல தங்கம் அல்ல அது என்ன
109. அள்ளவும் முடியாது கிள்ளவும் முடியாது அது என்ன
110. ஒரு குருவிக்கு ஒரே கால்; நாலு இறக்கை
112. ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன
113. ஆயிரம் பேர் வந்து சென்றாலும் வந்த சுவடு தெரியாது? அது என்ன?
114. இதயம் போல் துடிப்பிருக்கும் இரவு பகல் விழித்திருக்கும் அது என்ன
115. எத்தனை முறை திறந்து மூடினாலும் ஓசை வராத கதவு
116. வெள்ளையாய் இருப்பேன் பால் அல்ல மீன் பிடிப்பேன் தூண்டில் அல்ல தவமிருப்பேன் முனிவரல்ல நான் யார்
117. எட்டி நின்று பார்ப்பான் பெட்டியில் போட்டுக்கொள்வான் அது என்ன
118. ஒளி கொடுக்கும் விளக்கு அல்ல சூடு கொடுக்கும் தீ அல்ல
119. நெருப்பில் சுட்ட மனிதனுக்கு நீண்ட நாள் வாழ்வு அது என்ன
120. உச்சியிலே கிரீடம் உடம்பெல்லாம் கண் அது என்ன
121. சாண் உயரச் சிறுவன் வைத்ததெல்லாம் சமைப்பான்
122. பேசாத வரை நான் இருப்பேன்
123. வயலுக்கு எல்லையானவன் தன் தலையையே நடக்கக் கொடுப்பான்
124. நடக்க முடியாது ஆனால் நகராமல் இருக்காது அது என்ன?
125. கால் உண்டு நடக்க மாட்டான்
126. கையிலே அடங்கும்
127. கண் இல்லாத என்னால் அழ முடியும் பார்க்க முடியாது, ஆனால் நான் வெங்காயம் இல்லை, நான் யார்?