தமிழக அரசு வீடு வழங்கும் திட்டம் 2024 - தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சரின் பசுமை வீடு மற்றும் குடிசை மாற்று வாரியம் போன்ற திட்டங்களில் பயன் பெறலாம். இந்த இரண்டிலும் பயன்பெறாதவர்கள் மத்திய அரசின் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அப்ளை செய்து புது வீட்டிற்கான மானியம் மற்றும் மானிய வட்டியை கட்டிக்கொள்ளலாம்.
யூனியன் பட்ஜெட்டில் 70, 000 கோடி ரூபாய் மட்டும் புதிய வீடு கட்டி கொள்வதற்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. 2015 இல் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் 2022 ற்குள் அனைவருக்கும் வீடு கிடைக்க வேண்டும் என்று நோக்கத்தோடு ஆரம்பித்தது. அதன் தொடர்ச்சியாக இனி வருங்காலங்களில் இருக்கும்.
இதையும் பார்க்க: தமிழ்நாடு ஊராட்சி கட்டிட விதிகள் 1997 pdf
மத்திய அரசு 60 சதவீதமும் மாநில அரசு 40 சதவீதமும் இதற்கு மானியமாக கொடுக்கின்றது. அப்ளை செய்ய விரும்புவோர் ஆன்லைன் ( Pmay ) மற்றும் பொது இ சேவை மையங்களில் அப்ளை செய்யலாம். இத்திட்டம் டிசம்பர் 31, 2024 வரையும் தான் செயல்படும்.
இதையும் பார்க்க: 2000 உதவித்தொகை பெற விண்ணப்பம்
மொத்தமாக 2, 67, 000 ரூபாய் வரையும் மானியமாக இதற்கு கிடைக்கும். ஆனால் லோன் அப்ளை செய்வோர் குறைந்தது 6, 00, 000 ரூபாயாவது லோன் போட வேண்டும். அப்போது தான் இந்த மானியம் உங்களுக்கு வந்து சேரும்.
இதையும் பார்க்க: குடிசை மாற்றும் வாரியம் வீடு காட்டும் திட்டம் 2024