தமிழக நிதி ஆணையத்தின் தலைவர் 2024

தமிழக நிதி ஆணையத்தின் தலைவர் 2024 ( தமிழ்நாடு மாநில முதல் நிதி ஆணையம் தலைவர் ) - நடுவண் அரசுக்கு எப்படி நிதி ஆணையம் செயல்படுகிறதோ அதேபோல் தான் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் இது செயல்படுகிறது. நடுவண் அரசு குடியரசு தலைவர் மூலம் ஆறு நபர்களை நியமிப்பார். ஆனால் மாநிலங்கள் பொறுத்தமட்டில் ஆளுநர் அவர்கள் தான் ஒரு தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்களை நியமனம் செய்வார். இந்த ஐந்து நபரும் முதலமைச்சர் மற்றும் அவர்களின் கீழ் உள்ள அதிகாரிகள், தலைவர்களின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் அவர்கள் பணி நிமித்தம் செய்வார்.

தமிழக நிதி ஆணையத்தின் தலைவர் 2024


இது இந்திய அரசியலமைப்பு சட்டம் 243 ஐ இன் கீழ் கொண்டு வரப்பட்டது ( நகராட்சி மற்றும் பஞ்சாயத்து ) . 73 மற்றும் 74 வது சட்ட திருத்தங்கள் அடிப்படையில் ஏப்ரல் 1992 வருடம் சேர்க்கப்பட்டது. இருந்தபோதிலும் நடைமுறையில் ஏப்ரல் 23, 1994 வருடம் தான் ஆரம்பிக்கப்பட்டது. நடுவண் அரசு 1951 ஆம் ஆண்டே இதனை கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் கடன் விவரம் 2024

முக்கிய பணிகள்

1. மாநிலம் மற்றும் நகராட்சி இவைகளுக்கான பரிந்துரைகள் தீர்மானித்தல்.

2. முக்கியமாக வரி வருவாய் பரிந்துரை மற்றும் பகிர்வு.

3. ஆளுநர் அவர்களுக்கு பரிந்துரை ( நிதி சம்பந்தப்பட்டது ).

4. கட்டணங்கள்.

5. தீர்வைகள்.

மாநில நிதிக்குழு தலைவர் யார்?

ஒவ்வொரு நிதிக்குழுவும் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை வீதம் மாற்றப்படும். தற்போதைய நிலையில் ஆறாவது நிதி ஆணையம் தொடர்கிறது. இது மார்ச் 06, 2020 அன்று தான் தொடங்கியது. தற்போதைய தமிழ்நாட்டின் நிதி ஆணையத்தலைவர் பெயர் 2023 யாரென்றால் திரு. பியாரே ( முன்னாள் இந்திய ஆட்சி பணியில் இருந்தவர் ).

இந்திய நிதி அமைச்சர் பெயர் 2024