தமிழகத்தில் கடைசியாக உருவாக்கப்பட்ட மாவட்டம்

தமிழகத்தில் கடைசியாக உருவாக்கப்பட்ட மாவட்டம் - தமிழ்நாட்டின் 38 வது மாவட்டம் அல்லது கடைசி மாவட்டம் என்பதெல்லாம் ஒரே அர்த்தம் தான். தற்போதைய நிலையில் தமிழ்நாட்டில் 38 மாவட்டங்கள் உருவாகியுள்ளன. இது நிரந்தரமல்ல. ஏனென்றால் வருவாய் கோட்டங்கள், ஊராட்சி ஒன்றியங்கள், வருவாய் மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் மாவட்டங்கள் கூடுதலாக அமல்படுத்த அதிக வாய்ப்புள்ளது. முதலில் 28, 32 என இருந்த மாவட்டங்கள் தற்போது 38 ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கடைசியாக உருவாக்கப்பட்ட மாவட்டம்


தமிழ்நாட்டின் 38 வது மாவட்டம் அல்லது முப்பத்தி எட்டாவது மாவட்டம் எது?

தமிழ்நாட்டில் டிசம்பர் 28, 2020 ஆண்டு மயிலாடுதுறை என்னும் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதன் முந்தைய மாவட்டமாக நாகப்பட்டினம் ஆக இருந்தது. தற்போது நாகபட்டினத்தினை மாவட்டத்தினை பிரித்து தனி மாவட்டமாக மயிலாடுதுறை உள்ளது. இதன் தலைநகரமும் மயிலாடுதுறை ஆகும். இதன் மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி, இதுவரை ஒன்பது லட்சம் மேலாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஒட்டுமொத்த பரப்பளவு 1, 172 சதுர கிலோ மீட்டர் வரையும் இந்த மாவட்டம் அமைந்துள்ளது.

மக்களவை சபாநாயகர் பெயர் 2022

சிறப்புகள்

1. வருவாய் கோட்டங்கள் - இரண்டு

2. ஊராட்சி ஒன்றியங்கள் - ஐந்து

3. வருவாய் வட்டங்கள் - நான்கு

4. வருவாய் கிராமங்கள் - இருநூற்று எண்பத்தியேழு

5. கிராம பஞ்சாயத்துகள் - ஐநூற்று நாற்பத்தி ஏழு

6. நகராட்சிகள் - இரண்டு

7. பேரூராட்சிகள் - நான்கு

இத்தகைய சிறப்புமிக்க இந்த மாவட்டத்தை சரிபார்க்க ஒரு இந்திய ஆட்சி பணி தேவை அதாவது கலெக்டர் தேவை. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பெயர் திருமதி. இரா. லலிதா அவர்கள் 2020 டிசம்பர் இல் இருந்து தற்போது வரையும் பணியாற்றி வருகிறார்.

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் 2022