தமிழ்நாடு கடன் தொகை 2024

தமிழ்நாடு கடன் தொகை 2024 சுமை - ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வாதாரத்தினை மேம்படுத்த அல்லது ஒரு சில சமயத்தில் உண்டாகும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடன் வாங்கும் நிலை ஏற்படுகிறது. அதேபோல் தான் ஒவ்வொரு மாநிலமும் வருவாய் பற்றாக்குறை அல்லது தொழில் வளத்தை மேம்படுத்த அடுத்த மாநிலங்களில் அல்லது மத்திய அரசாங்கத்தில் அல்லது உலக வங்கியில் கடன் வாங்கும் நிர்பந்தம் ஏற்படுகிறது. இந்திய நாடு இதுவரை 620 பில்லியன் டாலர்களை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு கடன் தொகை 2024


ஒரு மாநிலத்தின் உற்பத்தியை பொறுத்து தான் மற்ற மாநிலமோ அல்லது வங்கியோ கடன் தரும். இந்த கடன் தொகைகளை ஈடுகட்ட அரசாங்கமானது தனது உற்பத்தியை மேம்படுத்துதல் தான் ஒரே வழியாகும். இதற்காகவும் அரசாங்கமும் பல்வேறு திட்டங்கள், தொழிற்சாலைகள் என உருவாக்கி வருகின்றனர். 1999 ஆம் ஆண்டு முதல் 2022 வரையிலான கடன் தொகைகளின் விவரங்களை கீழே காண்போம்.

இந்தியாவின் கடன் விவரம் 2024

தமிழ்நாட்டின் மொத்த கடன் தொகை எவ்வளவு

1. 1999 முதல் 2000 - 18, 989 கோடி

2. 2005 முதல் 2006 - 50, 625 கோடி

3. 2011 முதல் 2012 - 1, 03, 999 கோடி

4. 2015 முதல் 2016 - 2, 11, 483 கோடி

5. 2017 முதல் 2018 - 3, 14, 366 கோடி

6. 2021 முதல் 2022 - 5.7 லட்சம் கோடி

7. 2022 முதல் 2023 - 6.53 லட்சம் கோடி ( தோராயமாக )

உற்பத்தி கடன் சுமை வரிசை மற்றும் கடன் தொகை வரிசை 2024

இதில் உற்பத்தி கடன் சுமை மூலம் முதல் இடத்தை பெற்று இருக்கும் மாநிலம் அருணாச்சலப்பிரதேசம் தான். தமிழ்நாடானது 15 வது இடத்தில் உள்ளது. இதேபோல் கடன் தொகையில் உத்திரப்பிரதேசம் முதலிடத்திலும் தமிழ்நாடு மாநிலம் மூன்றாவது இடத்திலும் தற்போது நீடித்து வருகிறது.

தமிழ்நாடு அமைச்சர் பட்டியல் 2024 Pdf