தமிழ்நாடு மாநகராட்சி பட்டியல் 2024

தமிழ்நாடு மாநகராட்சி பட்டியல் 2024 Pdf ( தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி எண்ணிக்கை பெயர்கள் 2024 எத்தனை ) - நம்முடைய தமிழ்நாடு மொத்தமாக மூன்று விதமாக நில பரப்புகளை பிரித்து கொள்கிறது. ஒன்று மாநகராட்சி, இரண்டு நகராட்சி மற்றும் மூன்று கிராம புறங்கள். ஒட்டுமொத்தமாக அனைத்து விஷயங்களையும் ஒரே மாநிலமாக செய்ய முடியாத காரணத்தால் இப்படி மூன்று விதமாக பிரித்தால் எளிமையாக செய்ய முடியும். இதில் மாநகராட்சி முதல் வரிசையிலும் நகராட்சி இரண்டாம் வரிசையிலும் கிராம புறங்கள் மூன்றாவது வரிசையிலும் வரும். நில பரப்புகளின் அடிப்படையிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பிலும் வருவாய் அடிப்படையிலும் மற்றும் தொழிற்சாலைகளின் அடிப்படையிலும் இந்த மாநகராட்சிகள் உருவாக காரணமாக அமைகிறது.

தமிழ்நாடு மாநகராட்சி பட்டியல் 2024


ஒரு நகராட்சியில் இருந்து மாநகராட்சிக்கு மாற்ற குறைந்தபட்சம் மக்கள் தொகை 10 லட்சங்கள் இருக்க வேண்டும். மேலும் அந்த இடத்தில் வருவாய் ஆக ஆண்டிற்கு 50 கோடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதும் இல்லாமல் அங்கு எத்தனை பஞ்சாயத்துகள், நகராட்சிகள், ஊராட்சிகள் இருப்பதே பொறுத்தே அந்த இடம் தகுதியானது இல்லையா என்று அரசாணை வெளியிடுவர். புதியதாக மாநகராட்சி உருவாக்கபட்ட பின் அதற்கு மேயர் மற்றும் துணை மேயரை நியமிப்பர். தற்போதைய 2022 நிலவரப்படி, தமிழ்நாட்டின் முதல் மாநகராட்சி எது என்று கேட்டால் சென்னை தமிழ்நாட்டிலே மிகப்பெரிய மாநகராட்சியாகவும் வருவாய் அங்கு 1875 கோடியாகவும் உள்ளது. சிறிய மாநகராட்சி என்று பார்த்தால் திண்டுக்கல் மாவட்டமாக இருக்கிறது.

இந்திய யூனியன் பிரதேசங்கள் 2024

தமிழ்நாடு 21 மாநகராட்சி பெயர்கள் மற்றும் எத்தனை 

1. சென்னை - 1688

2. கடலூர் - 2021

3. சிவகாசி - 2021

4. கும்பகோணம் - 2021

5. மதுரை - 1971

6. கோயம்புத்தூர் - 1981

7. காஞ்சிபுரம் - 2021

8. கரூர் - 2021

9. திருச்சிராப்பள்ளி - 1994

10. சேலம் - 1994

11. திருநெல்வேலி - 1994

12. ஆவடி - 2019

13. தாம்பரம் - 2021

14. திருப்பூர் - 2008

15. ஈரோடு - 2008

16. வேலூர் - 2008

17. ஓசூர் - 2019

18. நாகர்கோயில் - 2019

19. தூத்துக்குடி - 2008

20. தஞ்சாவூர் - 2014

21. திண்டுக்கல் - 2014

குறிப்பு

மேலே குறிப்பிட்டு இருக்கும் பெயர்கள் பக்கத்தில் ஆண்டுகள் இருக்கும். அது அந்த மாநகராட்சி எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்பதை குறிக்கும்.

இந்திய மாநிலங்கள் எத்தனை 2024