தமிழ்நாடு மாவட்ட ஊராட்சி எண்ணிக்கை 2024 எத்தனை - தமிழ்நாடு மாநிலத்தை தனியாக ஆட்சி செய்வது கடினம் என்கிற காரணத்தினால் நிறைய நிறைய துறைகள் கிராமங்கள் முதல் பெரிய மாநகராட்சிகள் அமல்படுத்தப்பட்டன. இதனால் எளிய மக்களும் தங்களுக்கு தேவையான அடிப்படை உரிமைகள், கேள்விகள், பரிந்துரைகள், புகார்கள் என அவர்கள் வசிக்கும் கிராமத்திலே கொடுக்கும் உரிமையை தமிழக அரசு வழங்கி வருகிறது. மொத்தமாக இரண்டு வழியாக உள்ளாட்சி அமைப்புகளை பிரித்து கொள்கிறார்கள். ஒன்று நகர்ப்புறம் மற்றொன்று ஊர்ப்புறமாகும்.
இதில் மாவட்ட ஊராட்சியானது ஊரக உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்தவை ஆகும். அதாவது ஊரக உள்ளாட்சி அமைப்புகளை பொறுத்தவரையில் கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி என உள்ளது. இந்த சட்டம் அரசிலமைப்பு சட்டத்தின் படி, 1994 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இதனை மூன்று அடுக்கு கொண்ட பஞ்சாயத்து ராஜ் என்றும் அழைக்கலாம். இதில் மாவட்ட ஊராட்சியானது கிராமம் மற்றும் ஒன்றியங்களில் பணிகளை செய்வது, மேம்படுத்துவது மற்றும் வளர்ச்சித்திட்டங்களின் ஆலோசனைகளை வளர்ச்சி திட்ட அலுவலரிடம் பரிந்துரைப்பது போன்ற விஷயங்களை செய்யக்கூடியது ஆகும்.
தமிழ்நாட்டின் முதல் மாநகராட்சி எது
மாவட்ட ஊராட்சி எத்தனை 2024
தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட ஊராட்சிகள் எண்ணிக்கை 36 ஆகும். அதாவது சென்னை போன்ற பெருநகரத்தினை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஒருவர் என நியமனம் செய்யப்படுகிறார். அவர் மாவட்ட ஊராட்சி தலைவர் என கருதப்படுகிறார். இவர் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களால் மறைமுகத்தேர்தல் மூலமாக தேர்ந்து எடுக்கப்படுகிறார். இவருடைய பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். எப்படி அடிப்படையான வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற துணை தலைவரை தேர்ந்து எடுக்கிறார்களோ அவர்களை போலவே இவரும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
புதிய மாநகராட்சி பட்டியல் 2024