தமிழ்நாடு மின்சார வாரியம் விவசாய மின் இணைப்பு

தமிழ்நாடு மின்சார வாரியம் விவசாய மின் இணைப்பு - வேளாண்மை மின் இணைப்பு சம்மந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் இனி ஆன்லைனில் செய்ய முடியும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மனு மற்றும் புகார்கள் விண்ணப்பிக்க என இரண்டையும் Tangedco வெப்சைட்டில் பதிவு செய்யலாம். அது மட்டுமில்லாமல் விண்ணப்ப நிலையும் அதற்குண்டான பதிவு கட்டணத்தையும் ஆன்லைனில் செய்ய முடியும். இதனால் வேலை நேரம் மற்றும் அலைச்சல் இருக்காது என்றும் அறிவித்துள்ளது மின்சாரத்துறை.

தமிழ்நாடு மின்சார வாரியம் விவசாய மின் இணைப்பு


இதில் உங்கள் பொது விவரங்கள் அனைத்தும் அப்டேட் செய்ய வேண்டும் என்பதால் விண்ணப்பிக்கும் முன்னர் அனைத்து விதமான ஆவணங்களையும் விவரங்களையும் எடுத்து வைத்தல் மிகவும் நல்லது. உங்களுடைய அப்ப்ளிகேஷன் ரிஜெக்ட் செய்திருந்தாலும் அதிலேயே காட்டி விடும் என்பதால் அடுத்தமுறை நாம் அப்ளை செய்யும் முன்னர் கவனமாக இருக்க உதவுகிறது.

தட்கல் மின் இணைப்பு என்றால் என்ன

1. மாவட்டம்

2. தாலுகா

3. கிராமம்

4. பிரிவு

5. உரிமையாளர் விவரம்

6. மின் கோருபவர் வகை

7. விண்ணப்பிக்கும் நபர் பெயர்

8. தந்தை, தாய் பெயர்

9. ஈ மெயில்

10. அலைபேசி எண்

11. கிணற்றின் உரிமையாளர்

12. முகவரி

இப்படி மேலே குறிப்பிட்டுள்ள விவரங்கள் அனைத்தும் அப்டேட் செய்ய வேண்டி இருக்கும். இதில் 11 வது வரிசையில் கூறியுள்ள கிணறு உரிமையாளர் ஒருவரா அல்லது இருவரா என்பதை குறிக்க வேண்டும். ஏனெனில் தனி பட்டாவில் அல்லது கூட்டு பட்டாவில் ஒரு சிலரது கிணறு இருக்கும் பட்சத்தில் அதனை தேர்வு செய்தல் அவசியம். மேலும் நில புல எண், எத்தனை லோட் வரையும் தேவைப்படுகிறது மற்றும் பாசனம் செய்வதற்கு உண்டான நில பரப்பு இவையனைத்தும் அதில் குறிப்பிட்டு இருக்கும். தடையில்லா சான்றிதழ் வாங்கி அதில் அப்லோட் செய்தல், புகைப்படம் போன்றவற்றை இறுதியாக அதில் அப்லோட் செய்தல் அவசியம். மொத்தமாக 118 ரூபாய் ( வரியையும் சேர்த்து ) செலவாகும். ஒருவேளை நீங்கள் விண்ணப்பிக்கும் சமயத்தில் பணம் இல்லையென்றால் 15 நாட்கள் அவகாசம் கொடுப்பார்கள். அதற்குள் அந்த 118 ரூபாய் கட்டினால் உங்கள் விண்ணப்ப நிலை ரிஜெக்ட் ஆகாது.

தமிழ்நாடு மின்சார வாரியம் புகார் எண்