தமிழ்நாடு நகராட்சி எண்ணிக்கை 2024 பட்டியல் Pdf எத்தனை - நகராட்சி என்றால் ஆங்கிலத்தில் முனிசிபாலிட்டி என்று பொருள். ஒரு குறிப்பிட்ட ஊர்களை அடிப்படையாக கொண்டு இந்த நகராட்சிகள் உருவாக்கப்படுகின்றன. அதாவது நகராட்சிகள் சுமார் 1, 00, 000 மக்கள் தொகை மற்றும் வருவாய்க்கு ஏற்ப பிரித்து கொள்வார்கள். அதற்கு மேலே மக்கள்தொகை மற்றும் வருவாய் அதிகமானால் மாநகராட்சிக்கு பெயர் மாற்றப்படும். எப்படி பேரூராட்சிகளுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை, முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைகள் உள்ளதோ அதேபோன்று நகராட்சிகளுக்கும் நிலைகள் உள்ளது.
இந்த நகராட்சி அமைப்புகள் உள்ளாட்சிக்கு உட்பட்டவையாகும். எப்படி ஒரு கிராம ஊராட்சிகள் செயல்படுகிறதோ அதேபோன்று இந்த நகராட்சிகளும் செயல்படும். இதில் நகராட்சி தலைவராக மக்கள் மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். துணை தலைவர் அவர்கள் நகராட்சி வார்டு மன்ற உறுப்பினர்கள் மூலம் மறைமுகமாக தேர்ந்து எடுக்கப்படுகிறார். ஆணையராக அரசு அதிகாரிகள் அந்தந்த நகராட்சிகளுக்கு பணிபுரிவார்கள்.
தமிழகத்தில் கடைசியாக உருவாக்கப்பட்ட மாவட்டம்
தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகள் எண்ணிக்கை 2024
தற்போது வரையும் மொத்தமாக 142 உள்ளது. 2020 ஆம் ஆண்டு வரைக்கும் 114 என இருந்ததை 2021 ஆம் ஆண்டு 142 ஆக உயர்ந்துள்ளது . தமிழ்நாட்டில் அதிக நகராட்சி உள்ள மாவட்டம் மொத்தம் இரண்டாக உள்ளது. ஒன்று கடலூர் மற்றொன்று கோயம்புத்தூர் ஆகும். இரண்டு மாவட்டத்திலும் தலா 07 வீதம் உள்ளன. தமிழ்நாட்டின் முதல் நகராட்சி 1687 ஆம் ஆண்டு சென்னை மாகாணம் உருவாக்கப்பட்டாலும் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாவே முதலில் உருவாக்கப்பட்டது ஆகும். ஏனெனில் அரசியலமைப்பு சட்டம் 74 வது திருத்தம் படி, 1992 ஆம் ஆண்டு தான் நகராட்சிகளுக்கு என தனியாக சட்டம் வந்தது. நடைமுறையில் 1993 ஆம் ஆண்டு தான் செயல்படுத்தப்பட்டது.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் 2024