தமிழ்நாடு ஊராட்சி கட்டிட விதிகள் 1997 pdf

தமிழ்நாடு ஊராட்சி கட்டிட விதிகள் 1997 pdf ( tamil nadu panchayat building rules 1997 ) - உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழ்நாடு அரசு நகராட்சி மற்றும் மாநகராட்சியினை போன்றே தனி அங்கீகாரம் கொடுத்து வருகின்றது. அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த வளர்ச்சி கட்டிட விதிகளில் அனைத்தையும் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளே கவனிக்கலாம் என்று கூறியுள்ளது.

தமிழ்நாடு ஊராட்சி கட்டிட விதிகள் 1997 pdf


தமிழ்நாடு ஊராட்சி சட்டம் 1994 யை தொடர்ந்து இந்த ஊராட்சி கட்டிட விதி 1997 யினை கட்டாயம் நாம் தெரிந்து வைப்பது அவசியமாகும். ஊராட்சியின் கீழ் கட்டப்படும் குடியிருப்புகள் மற்றும் வணிக கட்டிடங்களுக்கு முழு அனுமதி வழங்க அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு முழு உரிமை உண்டு. மேலும் முதலில் 2152 சதுர அடி வரையும் தான் உள்ளாட்சி அமைப்பு அனுமதி தந்தது. இந்த 1997 விதியை பயன்படுத்தி 4000 சதுர அடி வரை குடியிருப்புகளுக்கு அனுமதி தரலாம் என்று 1997 விதி சொல்கிறது.

இதையும் பார்க்க: பஞ்சாயத்து ராஜ் சட்டம்

இதேபோல் வணிக கட்டிடங்களுக்கு முதலில் 100 சதுர மீட்டர் அதாவது 1076 சதுர அடி வரையும் கட்டி கொள்ளலாம் என இருந்ததை தற்போது 2000 சதுர அடி வரை கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கலாம் என்று 1997 விதி சொல்கிறது.

இதையும் பார்க்க: கிராம ஊராட்சி எண்ணிக்கை 2023