தமிழ்நாடு பெண்கள் சொத்துரிமை சட்டம் 1989 ( பெண்களுக்கு சொத்துரிமை சட்டம் தமிழ்நாடு ) - சொத்துரிமை சட்டம் அனைவருக்குமே பொருந்தும். ஆனால் தமிழ்நாடு அரசு 1989 இல் பெண்களுக்கென தனியாக சட்டம் கொண்டு வந்தது. அது என்னவென்றால் பெண்களுக்கும் சொத்தில் முழு உரிமை உண்டு என்பதே ஆகும்.
அதற்கு முன்னர் பெண்களுக்கு சொத்தில் உரிமை இல்லை எனவும் அவர்கள் அனுபவிக்கவும் சீதன சொத்து மட்டும் தான் பெற முடியும் என்றும் சட்டம் சொன்னது. அதை உடைத்து பெண்கள் ஆண்களை போலவே பங்காளிகளாக சொத்தில் பங்கு கேட்கலாம் என்று அரசாங்கம் ஆணை வெளியிட்டது.
1989 க்கு மேல் திருமணம் செய்த பெண்ணுக்கு நிச்சயம் சொத்தில் பங்கு இல்லை என்பதையும் 1989 க்கு கீழ் திருமணம் செய்த பெண்ணுக்கு சொத்தில் ஆண்களை போலவே பெண்களுக்கு உரிமை உண்டு என்பதை நீங்கள் நினைவில் கொள்தல் அவசியம்.
மேலும் சீதனம் சொத்து மட்டும் தான் இருந்த நேரத்தில் பரம்பரை மற்றும் பூர்வீக சொத்தும் பெண்களுக்கு உள்ளது. ஒருவேளை நீங்கள் 1989 க்கு முன்னர் திருமணம் செய்து இருந்தால் உங்கள் வீட்டில் பாகப்பிரிவினை செய்யாமல் இருப்பின் நீங்கள் சொத்து கேட்கலாம்.
அதற்கு பிறகு ஏராளமான பெண்களுக்கான சொத்து சட்டம் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.