தமிழ்நாடு பேரூராட்சி பட்டியல் 2024 எண்ணிக்கை ( Peruratchi list in tamilnadu ) - உள்ளூர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு உறுப்பினர்களை கொண்டு ஆட்சி செய்வது ஆகும். தமிழ்நாடு மாநிலம் தன்னிச்சையாக எப்போதும் செயல்பட வாய்ப்பில்லை. அதாவது தனித்து நின்று எந்த செயல்களையும் செய்ய முடியாத காரணத்தினால் ஊராட்சி பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி என தனித்தனியாக பிரித்து கொள்வதால் அங்கு உள்ள மக்கள் மற்றும் இதர பணிகளை எளிமையாக செய்ய முடியும். உதாரணமாக ஊராட்சியில் 1000 மக்களும் பேரூராட்சியில் 10, 000 மக்களும் நகராட்சியில் 1, 00, 000 மக்களும் மாநகராட்சியில் 10, 00, 000 மக்களும் இருப்பார்கள்.
தற்போது வரையும் 488 பேரூராட்சிகள் இயங்கி வருகிறது. இதிலும் ஐந்து வகைகளாக ஒரு பேரூராட்சியை பிரிப்பர். அவைகள் முதல்நிலை, இரண்டாம்நிலை, மூன்றாம் நிலை, தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை பேரூராட்சி என பட்டியலிட்டு இருக்கிறார்கள். அதாவது வருவாய் ஏற்றத்திற்கு தகுந்த மாதிரி இந்த நிலைகள் பேரூராட்சிகள் கீழ் செயல்படுகின்றன. அப்படி என்னென்ன வருவாய் நிலைகளை கொண்டுள்ளது என்று வரிசைப்படி பார்ப்போம்.
தமிழ்நாடு மாநகராட்சி பட்டியல் 2024
நிலைகள்
1. முதல் நிலை - 25 லட்சங்கள்
2. இரண்டாம் நிலை - 10 லட்சங்கள்
3. 3 ம் நிலை - பத்து லட்சங்கள் கீழ் செயல்படும் பகுதிகள்
4. தேர்வு - ஐம்பது லட்சங்கள்
5. சிறப்பு - ஒரு கோடி
இது 1958 ஆம் ஆண்டு ஊராட்சி வரைவின் கீழ் கொண்டுவரப்பட்டது. இதனை ஊராட்சி ஒன்றியத்தின் ஒரு அங்கம் என்றும் சொல்லலாம். 2019 இன் படி, 528 பேரூராட்சிகள் இருந்தன. அது நாளடைவில் தமிழ்நாடு பேரூராட்சி எண்ணிக்கை 488 ஆக மாறியது. ஏனெனில் நகராட்சியாக ஒரு சில பேரூராட்சி மாறிய காரணத்தால் இன்று 488 மட்டுமே உள்ளது. குறைந்தபட்சம் 2 அரியலூர் மாவட்டத்திலும் அதிகபட்சமாக 51 கன்னியாக்குமரி மாவட்டத்திலும் உள்ளது.
இந்திய மாநிலங்கள் எத்தனை 2024