தமிழ்நாடு தையல் தொழிலாளர் நல வாரியம் புதுப்பித்தல் ( tamilnadu thaiyal tholilalar nala variyam online renewal ) - கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் உறுப்பினர்கள் இந்த திட்டத்தின் மூலம் மிகவும் பயனடைந்து உள்ளார்கள். இதில் 17 ற்கும் அதிகமான நல வாரியம் உள்ளது. அதில் ஐந்தாவதாக இந்த தையல் நல வாரியம் உள்ளது.
இந்த தையல் நல வாரியத்தின் மூலம் அவ்வப்போது ஊக்கத்தொகை, உதவித்தொகை மற்றும் அவர்களின் பிள்ளைகளின் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை என பல்வேறு விதமாக பயனடைந்து கொள்ள முடியும். ஆனால் அதற்கு கட்டாயமாக உறுப்பினர் ஆகி இருக்க வேண்டும். மேலும் வருடம் அல்லது ஆயுள் சந்தா கட்டிருப்பது அவசியமாகும்.
இந்த நல வாரியம் சேர விருப்பமுள்ளவர்கள் புதிதாக ஆன்லைன் மற்றும் இ சேவை மையத்தில் அப்ளை செய்யலாம். இதற்கு கட்டணமாக 100 லிருந்து 500 ரூபாய் வரையும் வசூல் செய்யப்படும். அப்ளை செய்தவுடன் விண்ணப்ப எண் ஒன்றை கொடுப்பார்கள். அதனை அவ்வப்போது Tnuwwb என்கிற இணையத்தளத்தில் செக் செய்ய வேண்டும். ஏற்கனவே கார்டு உள்ளவரெனில் புதுப்பிக்க வேண்டுமென்றாலும் இந்த வழிமுறையினேயே பின்பற்றி கொள்ளலாம். ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வீதம் என புதுப்பிக்க வேண்டும்.
இதையும் பார்க்க: 2000 உதவித்தொகை பெற விண்ணப்பம்
தேவைப்படும் ஆவணங்கள்
1. ஆதார் அட்டை
2. தையல் தெரியும் என்பதற்காக சான்று
3. குடும்ப அட்டை
4. வங்கி கணக்கு முதல் பக்கம்
5. புகைப்படம்
குறிப்பு
ஒரு மாதத்திற்கும் மேலாக உங்கள் விண்ணப்ப நிலை பெண்டிங் உள்ளதென்றால் உங்கள் கிராம நிர்வாக அதிகாரியிடம் சென்று இந்த நகலை காண்பிக்க வேண்டும்.
இதையும் பார்க்க: நலவாரிய அட்டை பதிவு