தமிழ்நாடு வட்டங்கள் எண்ணிக்கை 2024 ( tamilnadu taluk list 2024 ) - வட்டம் என்பதை நாம் தாலுகா என அழைக்கலாம். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கோட்டம், வட்டம், உள்வட்டம் மற்றும் கிராமங்கள் என பிரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இரண்டாவதாக உள்ளது தான் இந்த வட்டம் எனப்படும் தாலுகா இருக்கிறது.
ஒவ்வொரு தாலுகாவிற்கும் 50 முதல் 100 கிராமங்கள் இருக்கின்றன. இதற்கு மேலும் கிராமங்கள் இருக்கும். ஒவ்வொரு தாலுகாவிற்கும் ஒவ்வொரு வட்டாட்சியர் அல்லது தாசில்தார் பணியமர்த்தப்படுகின்றார்.
தாசில்தாருக்கு உதவிபுரிய தலைமையிடத்து துணை வட்டாட்சியர் மற்றும் வருவாய் ஆய்வாளர் உள்ளார்கள். வருடத்தில் ஒருமுறை வீதம் ஜமாபந்தி நடத்தி அதில் குறைகள் கேட்பது அல்லது பதிவேடுகள் சப்மிட் செய்தல், நிலம் சம்பந்தப்பட்ட பட்டா, சிட்டா, முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை மற்றும் இதர உதவித்தொகைகளெல்லாம் இவர் மூலம் தான் மக்களுக்கு வருகின்றன.
இதையும் பார்க்க: கிராம ஊராட்சி எண்ணிக்கை 2024
தமழ்நாடு தாலுகாக்களின் எண்ணிக்கை 2024 பட்டியல்
தற்போது வரையும் 317 வருவாய் வட்டங்கள் உள்ளது. இதில் சென்னை மாவட்டம் மட்டும் அதிகப்படியான வட்டங்களை வைத்துள்ளது. சென்னை மாவட்டம் வைத்துள்ள வருவாய் வட்டங்களின் எண்ணிக்கை மட்டும் 16 ஆகும். அதேபோல நாகப்பட்டினம், மயிலாடுதுறை. அரியலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்கள் தலா 4 வட்டங்களை கொண்டிருக்கின்றது.
இதையும் பார்க்க: தமிழ்நாடு ஊராட்சி ஒன்றியம் எண்ணிக்கை 2024