தட்கல் மின் இணைப்பு என்றால் என்ன - தட்கலை மின் இணைப்பு மொத்தமாக இரண்டு விதமாக அழைக்கலாம். ஒன்று சுயநிதி மற்றும் விரைவு விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டம் எனலாம். அதாவது 2017 ஆம் ஆண்டு இந்த திட்டம் திருத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. 01.04.2000 ஆண்டு முதல் 31.04.2010 வரையும் பதிவு செய்திருந்த விவசாயிகள் இதற்கு அப்ளை செய்யலாம். மற்றவர்கள் அப்ளை செய்யக்கூடாதா என்று கேட்டால் அப்படி இல்லை. மற்றவர்களும் விரைவு விவசாய திட்டத்திற்கு அப்ளை செய்ய முடியும்.
ஏனென்றால் சீனியர் என்ற அடிப்படையில் இது தொடர்வதாக மின்சார வாரியம் குறிப்பிட்டுள்ளது. ஆனாலும் பணம் செலுத்தி மின்சாரம் வழங்கலாம் என்கிற திட்டம் 2017 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கு முன்னர் எல்லாம் சாதாரண, 25, 000 மற்றும் 50, 000 திட்டம் மட்டுமே இருந்ததால் விவசாயிகள் அதற்கு பதிவு செய்தும் அவர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. ஆனாலும் தட்கல் முறையில் பதிவு செய்தவர்களுக்கும் விரைவாக மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மின்சார வாரியம் விவசாய மின் இணைப்பு
இதற்காக வருடத்திற்கு 10, 000 மின்சாரமும் வழங்குவதாக அறிவித்திருந்தது. ஆனால் 2018 ஆம் ஆண்டு கஜா புயல் காரணமாக அந்த வருடம் 10, 000 பேருக்கு மின்சாரம் வழங்குவதை தவிர்த்து விட்டார்கள். இதனை ஈடுகட்டவே 2019 ஆம் ஆண்டு 20, 000 பேருக்கு மின்சாரம் வழங்கினார்கள். ஐந்து எச் பி க்கு 2.50 லட்சம், 7.50 எச் பி க்கு 2.75 லட்சமும், 10 எச் பி க்கு 3 லட்சம் ரூபாயும், 15 எச் பி க்கு 4 லட்சமும் செலுத்த நேரிடும். இந்த விரைவு முறையால் சீக்கிரம் மின்சாரம் வந்துவிடும் என்ற நோக்கத்தோடு விவசாயிகள் காத்து கொண்டிருக்கின்றனர். இந்த தட்கல் முறையால் நிறைய நிறைய விவசாயிகள் பலன் அடைந்து உள்ளனர்.
மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வது எப்படி
சாதாரண மக்கள் தட்கல் முறையில் மின்சாரம் கிடைக்காதபோது ஆயில் மோட்டர்களையும் மற்றும் தோட்டக்கலை 3ஏ1 யும் உபயோகித்து வந்தனர். இதற்கு மாத மாதம் யூனிட் அடிப்படையில் பணம் கட்ட வேண்டியும் இருக்கும். இதனால் விவசாயிகளுக்கு கடும் நட்டமே ஏற்பட்டது. இதனை சரிகட்டவே அரசு இந்த திட்டத்தினை அமல்படுத்தியது.