தட பாத்தியம் - தட பாத்தியம் பிரச்சனை ஏதேனும் வந்துவிட்டால் நிலத்தில் இருக்கும் நபருக்கு தலைவலி தான். ஏனென்றால் நம்முடைய நிலத்தில் தட பாத்தியம் வந்து விட்டாலோ அல்லது பிறர் நிலத்தில் பொது பாதை வழக்கு வந்துவிட்டாலோ பிரச்சனை தான் என்று அர்த்தம். அதனை எவ்வாறு கையாளுவது மற்றும் சமாளிப்பதை பற்றி பார்ப்போம்.
நான் ஐந்து வருடங்களாக வீட்டில் வசிக்கிறேன். என் வீட்டு பக்கத்தில் நான் போக வர வழி இருக்கிறது. அதனை பக்கத்துக்கு வீட்டுக்காரர் ஆக்கிரமிப்பு செய்து மதில்சுவர் கட்ட உள்ளார். நான் என்ன செய்வது ?
முதலில் அந்த பாதை உங்கள் பத்திரத்தில் வருகிறதா என்று பார்க்க வேண்டும். அப்படி இல்லை என்றால் பக்கத்துக்கு வீட்டுக்காரரிடம் விசாரிக்க வேண்டும். அவர் ஏதும் பதில் கூறாமல் மௌனமாக இருக்கிறார் என்றால் அந்த பாதை பொது பாதை ஆக இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். அப்படியும் இல்லை என்றால் உங்கள் ஊர் கிராம நிர்வாக அலுவலகரிடம் சென்று மனு கொடுத்த பிறகு அந்த பாதையில் சுவர் கட்டலாமா அல்லது வேண்டாமா என்று அவர்களே டிசைட் செய்வார்கள்.
அண்ணன் தம்பிகள் இருவருமே பூர்வீக சொத்தை பாக பிரிவினை செய்து கொண்டுள்ளார்கள். ஆனால் அண்ணன் இடத்தில் பொதுவழி பாதை இருக்கிறது ?
முதலில் அந்த பாதை உங்கள் நிலத்திற்கு வருகிறதா அல்லது பொது மக்கள் உபயோகிக்கும் இடங்களில் வருகிறதா அல்லது உங்கள் இடங்களில் பொது மக்கள் பாதையாக உபயோகிக்கிறீர்களா என்று பார்க்க வேண்டும். அப்படி ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் உரிமையியல் நீதிமன்றம் சென்று வழக்கு தொடுக்கலாம்.
பல வருடங்களாக வழிகளை பயன்படுத்தி தான் செல்கிறேன். வேறு பாதைகள் ஏதும் கிடையாது. என்ன செய்வது ?
திடீர் என்று உங்கள் வீட்டு அருகில் இருக்கும் நபர் உரிய ஆவணம் காட்டி அந்த இடத்தில் செல்ல தடை விதிக்கிறார் என்றால் அவரிடம் வலுவான ஆவணங்கள் இருக்கிறது என்று அர்த்தம். இதே விளை நிலங்கள் இருந்தும் வழி விடாமல் தடுத்தால் அரசாங்கமே அந்த இடத்திற்கு வழி செல்ல தடை இல்லை என்று கூறும். ஆனால் இது மனை மற்றும் வீடு சார்ந்தவைகளாக இருப்பதனால் வழக்கு தொடுக்கலாம்.