தகவல் அறியும் உரிமை சட்டம் மாதிரி மனுக்கள் PDF

தகவல் அறியும் உரிமை சட்டம் மாதிரி மனுக்கள் Pdf விண்ணப்பம் பட்டா phone number download free ( thagaval ariyum urimai sattam in tamil how to apply ) - அரசு மற்றும் அதனை சார்ந்த எந்த நிறுவனங்களாக இருந்தாலும் மக்கள் அதனை உரிமை கோரும் சட்டம் தான் தகவல் அறியும் உரிமை சட்டம் ஆகும். இந்த சட்டம் 2005 இல் மத்திய அரசாங்கம் நடைமுறையில் கொண்டு வந்தது. இந்த தகவல்களை யாரிடம் பெறுவது என்றால் அரசு நிறுவனங்களில் உள்ள பொது தகவல் அலுவலகரிடம் பிரிவு எண் 5 மற்றும் உட்பிரிவு 1 இந்த கீழ் கேட்டு அறிந்து கொள்ளலாம்.

தகவல் அறியும் உரிமை சட்டம் மாதிரி மனுக்கள் Pdf


ஒரு அரசு சார்ந்த கேள்விகளை தகவலாக பெறுவதற்கு இந்த உரிமைச் சட்டம் உதவுகிறது. விண்ணப்பதாரர் மனுவை நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம். இதற்கான கட்டணம் 10 ரூபாய் ஆகும். ஒரு சில நேரத்தில் உங்கள் தகவல் செய்தி அதிகமாக இருந்தால் அதற்கு ஏற்றாற்போல் பணம் வசூலிக்கப்படும். அதாவது சிறிய தகவல்கள் இருந்தால் இரண்டு ரூபாயும் ஆவணங்களை ஒரு மணி நேரத்திற்கு பின்பு ஆராய்ந்தால் ஐந்து ரூபாய் கட்டணமும் கூடுதலாக இருந்தால் ஐம்பது ரூபாயும் வசூல் செய்யப்படும். இதனை பொது தகவல் அலுவலரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

இதனை காலை ஒன்பது மணியில் இருந்து மாலை ஐந்து முப்பது வரையும் அலுவலகங்கள் செயல்படும். அதனால் அஞ்சல் துறையின் மூலம் செலுத்துவோர் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்றால் உங்களுக்கு எவ்வித கட்டணமும் கிடையாது. ஆனால் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர் என்று ஒரு சான்றிதழ் வாங்கி அதில் இணைக்க பட வேண்டும்.

தகவல் அறியும் உரிமை சட்டம் பிரிவுகள் 

சாதாரண வெள்ளை தாளில் உங்களுடைய மனுவை எழுதினால் போதுமானது. வழக்கம் போல் அனுப்புநர், பெறுநர், பொருள் மற்றும் விவரங்கள் சரியாக எழுதினால் போதுமானது. பிரிவு 6 இன் கீழ் தமிழும் நீங்கள் மனுவை எழுதலாம். ஒருவேளை உங்கள் மனு நிராகரிக்கப்பட்டால் பிரிவு எட்டு மற்றும் ஒன்பது கீழ் அவர்கள் நிராகரிக்கலாம். ஆனால் அதற்குண்டான காரணத்தை அவர்கள் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

நீங்கள் மனு எழுதி அனுப்பிய நாளில் இருந்து முப்பது நாட்களுக்குள் உங்களுக்கு ரெஸ்பான்ஸ் வந்து விடும். அப்படி வரவில்லை என்றால் மாநில தகவலுக்கு மனுவை தரலாம். அப்படி அங்கேயும் ரெஸ்பான்ஸ் இல்லையென்றால் மத்திய தகவல் அலுவலகத்திற்கு உங்கள் மனுவை மேல் முறையீடு செய்யலாம்.

நீங்கள் அனுப்பிய அல்லது காத்துக்கொண்டிருக்கும் உங்கள் மனு 30 நாட்களுக்குள் எந்த வித ரெஸ்பான்ஸ் இல்லையென்றாலும் அல்லது ரெஸ்பான்ஸ் செய்து ஆனால் அது உங்களுக்கு போதவில்லையென்றாலும் மற்றும் தவறான தகவல்கள் கொடுத்திருந்தாலும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 19(1) இன் கீழ் மேல்முறையீடு செய்யலாம்.

குறிப்பு 

நீங்கள் அஞ்சல் அலுவலகத்தில் உங்கள் மனுவை அனுப்பும் முன் ரெஜிஸ்டர் செய்து விடுங்கள். அப்படி ரெஜிஸ்டர் செய்தால் உங்களுக்கு Acknowledgement ஒன்றை கொடுப்பார்கள். இது எதற்காக என்றால் உங்களுடைய லெட்டர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சென்று விட்டதா இல்லையா என்று உங்கள் Acknowledgement இல் தெரிந்துவிடும். இதனால் உங்கள் லெட்டர் வரவில்லை என்று அந்த அதிகாரிகள் கூற முடியாது.

பட்டா சிட்டா

Rtionline