தாலி எத்தனை கிராம் இருக்க வேண்டும்

தாலி எத்தனை கிராம் இருக்க வேண்டும் - திருமாங்கல்யம் என்பது பெண்களுக்கு மிகவும் பொக்கிஷமான ஒன்றாகும். கணவருக்கும் இவர்களுக்கும் இடையுள்ள ஒரு அச்சாணி ஆகும். அப்படி இருக்கும் வேளையில் அதனை சரியாக மற்றும் நன்மை ஏற்படுத்தக்கூடிய விஷயமாக நாம் மாற்றுதல் சிறப்பினை தரும். எப்படி நாம் நகைகள் வாங்கும்போது நல்ல நேரம், நல்ல நாள், ஹோரை இவைகளையெல்லாம் பார்க்கிறோமோ அதேபோல் இவற்றிற்கும் முக்கியத்துவம் கட்டாயமாக நாம் கொடுக்க வேண்டும்.

தாலி எத்தனை கிராம் இருக்க வேண்டும்


திருமாங்கல்யத்தில் நாம் முதன்மையாக வாங்குவது தாலி தான். இது அவரவர் விருப்படியும் அல்லது பாரம்பரிய தாலி வகைகளை வாங்குவர். இதில் எவ்வளவு கிராம் அல்லது எத்தனை பவுன் நகை வேண்டுமென்றாலும் வாங்கி கொள்ளலாம். கால் பவுன் ( இரண்டு கிராம் ) முதலிருந்தே நாம் வாங்கலாம்.

இதையும் தெரிஞ்சிக்க: 1 பவுன் தங்கம் விலை இன்று

தாலி செயின் எத்தனை பவுன் இருக்க வேண்டும்

ஒற்றைப்படை வரிசையில் மட்டுமே தாலியை வாங்க வேண்டும். அதாவது 01, 03, 05 என ஒற்றைப்படை வரிசை கணக்கில் நாம் வாங்க வேண்டும். ஒற்றைப்படையில் வாங்கினால் இருவரையும் பிரிக்கமுடியாது என்பது நமது முன்னோர்கள் நமக்கு எடுத்துரைத்த அறிவுரையாகும். அதனை நாம் இன்றளவும் பின்பற்றி வருகின்றோம். ஒருவேளை ஏற்கனவே இரட்டை படையில் நகைகள் வாங்கி இருந்தால் அதனுடன் குண்டு, காசு மணி ஏதாவது ஒன்றை சேர்க்கலாம்.

இத படிக்கலாமே: மாங்கல்யம் வாங்க நல்ல நாள்