கோவை மாநகராட்சி வார்டுகள், வரைபடம், ஆணையர், மேயர் மற்றும் மண்டலம் - கோயம்புத்தூர் மாவட்டத்தினை கோவை என்றும் அழைக்கலாம். கோவை மாவட்டத்தின் பெயரிலேயே மாநகராட்சி இருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் மொத்தமாக 21 மாநகராட்சிகள் இருப்பதை நாம் ஏற்கனவே அறிந்த ஒன்று தான். அதில் இரண்டாம் இடத்தினை தொடர்ந்து தக்க வைக்கும் பெருமை கோவைக்கு உள்ளது. மேலும் முதல் நிலையான சென்னைக்கு அடுத்து பெருமாநகராட்சியாக இது கருதப்படுகின்றது.
இதன் பரப்பளவு மொத்தமாக 306. 4 சதுர கிலோ மீட்டர் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் ஆண்டு வருவாய் மட்டுமே 754 கோடி ஆகும். 2011 ஆம் ஆண்டு எடுத்த மக்கள் தொகை கணக்கீட்டின் படி 34 லட்சம் பேர் உள்ளனர். அதாவது இந்த மாநகராட்சியின் கீழ் உள்ள எண்ணிக்கை மட்டும் தான் இது.
இதையும் படிக்கலாமே: Veetu vari online payment
முதன்முதலில் 1848 ஆம் ஆண்டு தான் இது நகராட்சியாக இருந்தது. பிறகு 1981 ஆம் வருடம் மாநகராட்சியாக உயர்த்தப்பட்டுள்ளது. இறுதியாக 2013 ஆம் வருடம் பெரு மாநகரமாக உருவாக்கப்பட்டது. தற்போது 100 வட்டங்களும் 148 வார்டுகளும் உள்ளன.
இதையும் தெரிஞ்சிக்கோங்க: வார்டு உறுப்பினர்கள் பணிகள் மற்றும் கடமைகள் Pdf
மண்டலங்கள்
மொத்தமாக ஐந்து மண்டலம் இந்த மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் வார்டுகள் சம அளவில் பிரிக்கப்படும். மண்டலங்களின் பெயர்கள் பின்வருமாறு:-
1. கிழக்கு
2. வடக்கு
3. தெற்கு
4. மேற்கு
5. மத்திய மண்டலம்.
கோவை மாநகராட்சி ஆணையர்
தற்போதைய ஆணையர் திரு. மு. பிரதாப் இந்திய ஆட்சி பணி மற்றும் துணை ஆணையர் டாக்டர். எம். சர்மிளா அவர்களும் உள்ளனர்.
கோவை மாநகராட்சி மேயர்
தற்போது பணியாற்றி கொண்டிருப்பவர் திருமதி. கல்பனா ஆனந்தகுமார் மற்றும் இவருக்கு உதவி புரிய துணை மேயர் திரு. வெற்றிச்செல்வன் அவர்களும் உள்ளார்.
இதையும் தெரிஞ்சிக்கோங்க: தமிழ்நாட்டின் முதல் மாநகராட்சி எது