தாலுகா வழங்கல் அதிகாரியின் ஒப்புதல் - ரேஷன் சம்மந்தப்பட்ட சேவைகளில் மிகவும் முக்கியமான சேவைகளில் ஒன்று தான் இந்த தாலுகா அதிகாரியின் ஒப்புதல். இதனை ஆங்கிலத்தில் TSO என்பார்கள். இந்த வட்டாச்சியர் வழங்கல் அலுவலகத்தில் இறுதியாக உங்கள் ரேஷன் சம்மந்த விஷயங்களை பார்வையிடுவர். அதில் எடுக்கப்படும் முடிவு தான் உங்கள் விண்ணப்ப நிலை தேர்வானதா அல்லது தேர்வாகவில்லையா என்பதை குறிக்கும்.
இதனை சரிபார்க்கவே அலுவலர்கள் பயனர்களின் விண்ணப்பங்களை ஒவ்வொன்றாக சரிபார்ப்பர். அதில் ஏதாவது தவறுகள், பிழைகள் அல்லது போலியான ஆவணங்கள் இருந்தாலோ அதனை ரிஜெக்ட் செய்யும் உரிமை உள்ளது. மேலும் விண்ணப்பங்கள் சரியாய் இருக்கும் பட்சத்தில் அதனை செலக்ட் விடுவர். இதற்காக அவர்கள் எடுத்து கொள்ளும் காலஅவகாசம் என்று பார்த்தால் பதினைந்து முதல் முப்பது நாட்கள் ஆகும். இன்றைய சூழ்நிலையில் ஏகப்பட்ட விண்ணப்பங்கள் தாலுகா வழங்கல் அலுவலகத்தில் குவிந்த வண்ணம் உள்ளது.
Tnpds பெயர் நீக்கம்
உங்களுடைய விண்ணப்பங்கள் ரிஜெக்ட் செய்யும் பட்சத்தில் நீங்கள் அதில் ஏதாவது பிழைகள் இருந்தால் அல்லது தவறுகள் இருந்தால் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட உணவுப்பொருள் வழங்கல் அலுவலகத்திற்கு ஒரு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டால் உங்களுக்கு ரிப்ளை வர ஓரிரு நாட்கள் ஆகும். அந்த செய்தியில் உங்கள் குறிப்பு எண் கொடுத்திருக்க வேண்டும்.