தான செட்டில்மென்ட் யார் யாருக்கு எழுதலாம்

தான செட்டில்மென்ட் யார் யாருக்கு எழுதலாம் - தான பத்திரம் மற்றும் தான செட்டில்மென்ட் இரண்டு பத்திரங்களும் வெவ்வேறு என்பதை வாசர்கள் புரிந்து கொள்தல் அவசியமாகிறது. ஏனெனில் இரண்டும் ஒரே மாதிரியான பெயர்களை கொண்டிருப்பதால் மக்கள் குழப்பம் அடைந்து கொள்கின்றனர்.

இதையும் பார்க்க: சதுர மீட்டர் to சதுர அடி

தான செட்டில்மென்ட் பத்திர பரிமாற்றம் தனது குடும்பத்திற்குள்ளாகவே நடக்கின்ற ஒரு பரிவர்த்தனை ஆகும். உதாரணமாக அம்மா, அப்பா இவர்கள் பிள்ளைகளுக்கு எழுதி வைக்கலாம். அதேபோல் அவர்களும் அம்மா அப்பா யாரோ ஒருவர் பெயரில் எழுதி வைக்கலாம். பிள்ளைகளுக்கு திருமணம் ஆன போதிலும் செட்டில்மென்ட் எழுதலாம்.

தான செட்டில்மென்ட் யார் யாருக்கு எழுதலாம்


சமீபத்தில் வந்த சுற்றறிக்கையின் படி நிபந்தனையோடு எழுதிய செட்டில்மென்ட் பத்திரங்கள் எளிதில் ரத்து செய்யலாம் என்றும் நிபந்தனையில்லாமல் எழுதிய பத்திரங்கள் அனைத்தும் ரத்து செய்ய முடியாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எழுதி கொடுத்தவரும் எழுதி வாங்கியவரும் சம்மதித்தால் நிச்சயம் ரத்து செய்யலாம்.

இதையும் பார்க்க: ஆளறி சான்றிதழ் படிவம்

மேலும் இனிமேல் செட்டில்மென்ட் பத்திரம் பரிவர்த்தனை செய்ய வரும் நபர்களின் பத்திரத்தில் நிபந்தனையோடு அடிப்படை வசதிகள் பத்திரத்தில் குறிப்பிட வேண்டுமென்று சார் பதிவாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பார்க்க: வீட்டு மனை அங்கீகாரம் பெறுவது எப்படி